20 Dec 2016

பிரிவினைவாதத்தை முன்னிறுத்தி அரசியல் நடாத்தும் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்-கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்

SHARE
தமக்குள் சுவர்களை  இட்டு  தமது  கட்சிக் கொள்கைகளுடன் மாத்திரம்  ஆட்சி நடத்தி வந்த  அரசியலை  மாற்றி  மக்கள்  மயப்படுத்திய  ஆட்சியை  கிழக்கில் நிறுவியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.
இனங்கள் மதங்களாக முரண்பட்டு தமக்குள் சுவர் பிரித்து  முகம் கூட பார்க்காமல் அரசியல் நடத்தி வந்தவர்கள் இன்று  ஒரே  சுவர்களுக்குள்   பிரச்சினைகளைப் பேசி  அதற்கு  தீர்வு  எட்டும் கலாசரத்தை கிழக்கு மாகாண சபை  உலகுக்கு காட்டியுள்ளதாக  கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

திரு கோணமலை கிலீ ஹோட்டலில் இடம்பெற்ற   சுற்றுலாத்துறை  தொடர்பாக  முதலமைச்சரும்  சுற்றுலா அபிவிருத்தி அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டின் திட்டத்திற்கு  அமைய ஹோட்டல்  முகாமைத்துவ  கற்கை நெறியை  பூர்த்தி செய்த  மாணவ மாணவிகளுக்கு  சான்றிதழ் வழங்கிவைக்கும் நிகழ்விலே  கலந்துகொண்டு   உரையாற்றகையிலேயே  முதமைச்சர் இதனைக் கூறினார்,

இதன் போது  கற்கை நெறியை  பூர்த்தி செய்த 58 மாணவர்களுக்கு  சான்றிதழ்களும் தொழில் வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை  கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்த போது  முடிந்தால்  அடுத்த  கூட்டத்தொடரை  நடத்திக் காட்டுங்கள்  என எதிர்க்கட்சியினர் சவால் விட்டபோது  இன்று  பல  கூட்டங்களை  நடத்திக் காட்டியிருக்கின்றோம்.
நாம் இனங்கள் மதங்கள் மற்றும் கட்சிகளாக வேறுபட்டு இருந்தாலும்  கிழக்கு  மக்களுக்காக     ஒரே  அணியில் திரண்டு இன்று  மாகாணத்திற்கான  நன்மைகளை பெற்று  வருகின்றோம்.

ஆகவே  இன்று  முஸ்லிம்  பாடசாலை  ,இந்து பாடசாலை பௌத்த  பாடசாலை மற்றும் கிறிஸ்தவ  பாடசாலை  என பிரிக்கப்பட்டு  திட்டமிட்ட வகையில்  அடிப்படையில்   இ ருந்தே   பிரிவினைவாதம்  வளர்க்கப்பட்டு வருகின்றது .இங்கு தான்  இனவாத்த்திற்கு  தூபமிடப்படுகின்றது என்ற யதார்த்த்தை  நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே  பிரிவினைவாத்த்தை  முன்னிறுத்தி அரசியல் செய்யும் கலாசரத்தை  ஒழிக்க வேண்டும் என்பதுடன்  அவ்வாறான  அரசியல் கலாசரத்தை  நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்  போவதில்லை  என்பதையும் தெ ளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்,

எனவே   இனவெறி கொண்டு  இனவாத  வலை வரிக்கும்  சதிகார்ர்களின்  சதித்திட்டங்களில் சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாகாமல்  சிந்தித்து  நடந்து  சிறுபான்மை  சமூகங்கள்  தமது  உரிமைகளை  வென்றெடுக்க வேண்டும்,

அது மாத்திரமன்றி  இனப் பிரச்சினைக்கான  தீர்வுக்கு முட்டுக்  கட்டையாக  உள்ள விடயங்களை தொடர்நதும்  பிரச்சினையாகவே வைத்திருந்து  அதில் குளிர் காய்ந்தமையினாலேயே   சிறுபான்மை  மக்கள் கடந்த  அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து  தூக்கியெறிந்தார்கள்.

ஆகவே அதே  தவறை  இந்த  அரசாங்கமும் செய்யாமல் சிறுபான்மை  மக்களை  முழுமையாக  திருப்தி படுத்தக் கூடிய  தீர்வை  இந்த  அரசாங்கம்  வழங்க வேண்டும் என்பதே  எமது எதிர்ப்பார்ப்பாகும் என கிழக்கு  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.




SHARE

Author: verified_user

0 Comments: