20 Dec 2016

பாசிக்குடா கடலின் அடியில் இயந்திரங்கள்

SHARE
மட்டக்களப்புக்கு பாசிக்குடா கடற்கரையிலிருந்து வடக்கே 20 கடல் மைல் தொலைவின் ஆழ்கடல் பகுதியில்  இயந்திர பாகங்கள் தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது விடயமாக மேலும் தெரியவருவதாவது@ திங்கட்கிழமை (19.12.2016) ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் கப்பலின் அல்லது விமானத்தின் பாகங்களை ஒத்த இயந்திரப் பாகங்கள் காணப்படுவதாக கடற்படையினருக்குத் தெரிவித்துள்ளனர்.

பாசிக்குடா கடற் கரையிலிருந்து 20 கடல் மைல் வடக்கு நோக்கி வங்காளக் கடலின் ஆழ்கடல் பகுதியிலேயே இவை தென்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவை கப்பலின் பாகங்களா அல்லது பெரிய பறப்பு விமானத்தின் பாகங்களா என்பது பற்றி தங்களால் உறுதிபடக் கூற முடியாது என்றும் மீனவர்கள் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியதை அடுத்து குறித்த இடத்திற்கு கடற்படையினரின் கண்காணிப்பு ஆய்வுப் பிரிவினர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கடற்படையினர் இது குறித்த உத்தியோகபூர்வ தகவல் எதனையும் இதுவரைத் தெரிவிக்கவில்லை. 









SHARE

Author: verified_user

0 Comments: