துறைநீலாவணை முன்னேற்றமையப்படுத்தல் அமைப்பினரின் "அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்" கூட்டம் சனிக்கிழமை (24)
பிற்பகல் 4.00 மணியளவில் துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமைப்பின் தலைவரும், கணக்காளருமான கந்தப்பன்.ஜெகதீசன் தலைமையில் துறைநீலாவணை மகாவித்தியாலய கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,பொறியியலாளர் கந்தப்பன் தங்கவேல் (அவுஸ்ரேலியா) விரிவுரையாளர்களான செ.அரசரெத்தினம், பே.அரசரெத்தினம்,கணக்காளர் கே.அரசரெத்தினம், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமூகசேவை உத்தியோகஸ்தர், க.சிவகுமார், திருமதி திலகராணி கிருபைராசா, அதிபர்களான சி.டில்லிநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
இதன்போது துறைநீலாவணையில் கடந்த காலத்தில் செயற்பாடுகளான கல்வி, உட்கட்டமைப்பு, சமூக, கலாச்சார மேம்பாடு, சுகாதார வசதிகள், விளையாட்டுத்துறை, போன்ற பல விடையங்கள் தொடர்பில்
கலந்துரையாடப்பட்டன.
துறைநீலாவணை பொதுநூலக அபிவிருத்தி, 2017ம் ஆண்டில் கணணி வளநிலையத்தை ஆரம்பித்தல், துறைநீலாவணை நுழைவாயிலில் நுழைவாயில் கோபுரம் அமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல்,கிராமமட்ட பாடசாலைகளில் சுற்றுச்சுழலை மேம்படுத்துவதற்காக சுற்றாடல் போட்டியினை நாடாத்துதல், கலாச்சார திணைக்களத்தின் ஊடாக துறைநீலாவணையில் கலாச்சார மண்டபத்தினை அமைத்தல், பத்து வருடங்களில் இளைப்பாறிய அரச உத்தியோகஸ்தர்களை கௌரவித்தல், புலமைப்பரீட்சையில் சித்தியடைந்வர்களை பாராட்டுதல், துறைநீலாவணை பிரதான வீதியில் குப்பை போடுவதை தடை செய்வதற் சட்ட நடவடிக்கை எடுத்தல்,போன்றன தீர்மானங்களும், இதன்போது எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment