7 Dec 2016

மட்டக்களப்பு ஊறணியில் கார் குடை சாய்ந்து விபத்து இருவர் காயம்

SHARE
மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை ஊறணி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த  
இருவர் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை இவ்விபத்து நிகழ்ந்தது. வீதியில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார் சடுதியாக குடை சாய்ந்தது. அந்நேரம் காருக்குள் அகப்பட்டிருந்தவர்களை வீதியால் சென்ற பயணிகள் துரிதமாகச் செயற்பட்டு காரின் கதவை உடைத்து வெளியே இழுத்தெடுத்து வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

ஏறாவூர் பக்கமிருந்து மட்டக்களப்பை நோக்கி கார் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவித்தது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: