8 Dec 2016

மருதமுனை - பெரியநீலாவணை வி.சி வீதியில் கனரக வாகனத்தில் மோதுண்டு 3 வயது சிறுவன் உயிரிழப்பு

SHARE
(டிலா)

மருதமுனை - பெரியநீலாவணை வி.சி வீதியில் இன்று (08.12 2016) காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட வீதி விபத்தில் எம்.என்.அஸ்ரிப் (3 வயது) சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
பெரியநீலாவணை வீ.சி.வீதியில் உள்ள தனது தாயின் சகோதரியின் வீட்டுக்கு சென்ற சிறுவன், அங்கிருந்த குறுக்கு ஒழுங்கையிலிருந்து பிரதான வீதியை நோக்கி விரைந்து வந்தபோது  பிரதான வீதியில்  கனரக வாகனத்துடன் மோதுண்டு ஸ்தலத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.
செய்தி எழுதும் வரை இரவு ( 8.10 மணி) ஜனாஸா உறவினர்களிடத்தில் கையளிக்கப்படவில்லை.

வைத்திய அறிக்கையை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பிரேத பரிசோதனையின் பின்னரே ஜனாஸா உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்படலாம் எனவும் உறவினர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

விபத்துக்குள்ளான கனரக வாகனம் சாய்ந்தந்தமருது பிரதேசத்தை சேர்ந்தது எனவும் சாரதி கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று கைதானதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: