24 Dec 2016

மோட்டார் குண்டு மீட்பு

SHARE
ஏறாவூர் பொலிஸ் பிரிவு, முற்ககொட்டான்சேனை விளையாட்டு மைதானத்தில் காணப்பட்ட மோட்டார் குண்டொன்றை படையினர் மீட்டுள்ளனர்.
கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் சனிக்கிழமை (24.12.2016) ஸ்தலத்திற்கு விரைந்த முறக்கொட்டான்சேனை படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இந்த மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட குண்டாக இருக்கலாம் என குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: