மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவகால மழைபெய்யாததினால் பயிர்கள் கருகி விவசாய செய்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் மழைவேண்டி மாபெரும் யாகபூசை சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்
குருக்கள் தலைமையில் வரலாற்றுசிறப்புமிக்க தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) காலை 09மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.
சில்லிக்கொடியாறு கமநல அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மழை வேண்டிய யாகபூசைக்கு அனைத்து கமநல அமைப்புக்கள்,
விவசாயிகள் கலந்து கொள்ளுமாறும் ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment