
களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலுள்ள மஞ்சக்கடவையூடாக துவிச்சக்கர வண்டியில் குறுக்கீடு செய்தபோது களுவாஞ்சிகுடி பக்கமிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து ஒன்று மேதியதாலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடை சிவகுரு ரமேஸ் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றது. இவ்விபத்து சம்பவம் பிள்ளையால் ஆலய சீசீரீவி யில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.
0 Comments:
Post a Comment