மரணமடைந்துள்ள தமிழக முதலமைச்சர் செவ்வி.ஜெ.ஜெயலலிதா உலக சாதனை தமிழச்சியாகத் திகழ்ந்தார். இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு மாத்திரமின்றி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்காக இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் ஓர் இருபுப் பெண்மணியாகத் திகழ்ந்தர் என மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் இலங்கைக்கான
கிளையின் பணிப்பாளரும், எழுத்தாளருமான டாக்டர்.ஓ.கே.குணநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவையிட்டு செவ்வாய்க் கிழமை (06) தெரிவித்துள்ள இரங்கல் செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது….
இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வி வளர்சியை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற நோக்குடன் மதுரை காமராசார் பல்கலைக் கழகத்தின் கிளை ஒன்றை இலங்கையில் நிறுவுவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டாhர். இலங்கைத் தமிழர்களின் இலக்கியத்தையும், இந்திய இலக்கியத்தையும் ஒன்றாக மதிப்பிடுவதற்கு அரும்பாடுபட்டுச் செயற்பட்ட ஒரு பெண்மணியாவார்.
தமிழ் நாட்டில் கிராமங்கள் தோறும், கல்வி, விவசாயம், உணவு, தொழில்நுட்பம், மருத்துவம், போன்ற பல துறைகள் உள்ளிட்ட பலவற்றிலும், மக்களுக்கு மகத்தான் சேவை செய்து வந்தவராவார்.
உலகதரத்தில் ராஜ பரம்பபரையிலிந்தும், சீமாட்டி பரம்பரைகளிலிருந்தும்தான் பல பெண்கள் உயர்ந்து நிற்கினறார்கள். மாறாக ஜெயலலிதா அவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்து அடிமட்டத்தில் இருந்து வளர்ந்த பெண்மணியாகத் திகழ்ந்தவராவார். அன்னாரின் மறைவையிட்டு மதுரை காமராசார் பல்கலைக் கழககத்தின் இலங்கைக் கிளை செவ்வாய்க் கிழமை (06) விடுமுறையாக அறிவித்துள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment