24 Dec 2016

நோயற்ற வாழ்வை அடுத்த சந்ததிகளுக்கு வழங்க வேண்டும்.

SHARE
பசுமைப்புரட்சியினை பிரதேசத்தில் ஏற்படுத்தும் பொருட்டு முதல் கட்டமாக இரசாயன நச்சுக்கள் அற்ற கத்தரிக் கன்றுகளை உற்பத்தி செய்து வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வழங்கி வைத்ததாக பட்டிப்பளைப்பிரதேச மனிதநேயக் காப்பகத்தின் தலைவர் வைத்தியர்  நா.பன்னீர்செல்வம் சனிக்கிழமை (24)  குறிப்பிட்டார்.  
கிராமப்புறங்களில் பயன்தரக்கூடிய சிறந்த திட்டங்களில் கிடைக்கும் உதவிகளைப் பயன்படுத்தி நோயற்ற வாழ்வை அடுத்த சந்ததிகளுக்கு வழங்க வேண்டும். மனிதநேயக் காப்பகம் கடந்த நான்கு மாதங்களில் நான்கு செயலமர்வுகளை நடாத்தி இருப்பதை மகிழ்வோடு தெரிவிப்பதோடு எமது காப்பகத்திற்கு சுவீஸ் நாட்டில் இருந்து உதவி வழங்கிய நலன்விரும்பிகளும் காப்பக உறுப்பினர்களுக்கு நன்றிகளையும் கூறுகின்றேன்.


உலகெங்கும் உள்ள வறுமையாலும், நோயினாலும், பசியினாலும், யுத்தக்கொடுமையாலும், அகதிகளாகவும், கைதிகளாகவும் வாழ்கின்ற மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், சுகமாகவும் வாழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டார்.






SHARE

Author: verified_user

0 Comments: