இந்த நாட்டிலே எமக்குத் தேவை தேசிய நல்லிணக்கமாகும் அதனை எமது மாவட்டத்தில் சீர்குலைப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இதனை ஆர்வலர்கள், சமூக நலன் விரும்பிகள், அரசியல்வாதிகள் அனைவரும்
மிகவும் அமைதியாகவும் பொறுமையையும் கையாளவேண்டும். என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
அதன் தலைவர் தலைவர் த.விக்னேஸ்வரன் தலைமையில் புதன் கிழமை மாலை (21) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன், களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,
சனத் நந்தலால், கிராமத் தலைவர் அ.கந்தவேள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீரலி….
கல்வித்துறையிலே சரியான வேலை செய்கின்ற பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சரியான சம்பளம் கிடைப்பதில்லை,
இதில் பிள்ளைகளின் தாய்மார் கவனம் செலுத்த வேண்டும். ஒரு பிள்ளையின் முன்னேற்றத்திற்கு ஆசிரியர் சமூகத்தின் பிரார்த்தனை நிற்சயமாக கிடைக்க வேண்டும். பிறப்பு என்பது இறப்புக்கான கட்டாய விடயமல்ல சமூகத்திற்கு பல சேவைகளைச் செய்ய வேண்டிய விடயமும் ஆகும்.
இதற்காத்தான் மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் கூறியிருக்கின்றார் “பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்” மனிதன் படைக்கப்பட்டது ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் உதவியினைச் செய்து இந்த உலகில் சாதனை படைக்க வேண்டும் என்பதாகும். இதற்காக நீங்கள் அனைத்து விடயங்களிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு போதும் இந்த நம்பிக்கையை இழக்க வேண்டாம் இதனால் நீங்கள் தோல்விகளையே சந்திப்பீர்கள்!
எந்தவொரு பிள்ளையும் சிறமை குறைந்தவர்கள் அல்ல அவர்கள் சமமான அறிவாற்றலையே கொண்டுள்ளனர. ஒரு பிள்ளை எவ்வாறு உருவாக வேண்டும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு பெற்றோருக்கும் வரவேண்டும். இந்த நம்பிக்கையை ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்து ஊட்டி வளர்க்க வேண்டும். இந்த நம்பிக்கை மிகுந்த வளர்ப்பின் ஊடாகவே உங்கள் பிள்ளைகள் சமூகத்தில் மிகுந்த பாராட்டுக்களைப் பெறுவார்கள். எனவேதான் அதிகம் அதிகம் கனவுகாணுங்கள் உங்கள் வெற்றிக்காக இறைவன் எப்போதும் துணையிருப்பார் இறைவன் உங்களை கைவிடமாட்டார்.
வறுமையைக் காட்டி பிள்ளைகளின் கல்வியினை நீங்கள் மறுக்கச் செய்யாதீர்கள் வறுமை இருக்கின்ற வீட்டில்தான் கல்விக் கடாற்சமும் குடியிருக்கின்றது.
இந்த மாவட்டத்தில் கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களை சற்று சிந்தித்து பாருங்கள் ஏதோ ஒரு வித்தில் வறுமையுடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர். (இதற்காக அவரின் கிராமத்தில் விறகுவெட்டும் தகப்பன் இறந்த பின்னரும் பொறியியல் துறையில் தெற்காசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவி ஒருவரின் கதையைக் கூறினார்) எனவே எந்த பெற்றோரும் வறுமையைக் காட்டி தாங்கள் பிள்ளைகளின் கல்வித் திறனை மழுங்கடிக்காதீர்கள்!
இந்த நாட்டிலே எமக்குத் தேவை தேசிய நல்லிணக்கமாகும் அதனை எமது மாவட்டத்தில் சீர்குலைப்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இதற்காக அனைத்து ஆர்வலர்கள், சமூக நலன்விரும்பிகள், அரசியல்வாதிகள் அனைவரும் மிகவும் அமைதியாகவும் பொறுமையையும் கையாளவேண்டும் இதனை எமது எதிர்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ்வதற்கு நாங்கள் தற்போது செய்ய வேண்டிய விடயமாகும்.
தற்போது பௌத்தவாதிகள் கூட எமது சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இதனை துவம்சம் செய்வதற்காக தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
நாங்கள் இந்த மாவட்டத்தில் மூவின மக்களுடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதனையே நாங்கள் விரும்புகின்றோம். எனவே அனைவரும் எமது மக்களுக்கு நிரந்தரமாக எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்ற மிக அவசியமான, முக்கியமான விடயம் இல்லாமல் போவதற்கு எவரும் துணை போகக் கூடாது. இதற்காக பொறுமை காத்து அமைதியாக இருக்கவேண்டிய கட்டாயம் காலகட்டமாக உள்ளபடியால் எமது எதிர்கால சந்ததியினருக்காக இதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment