இந்த ஆண்டில் சிறப்பான சேவையினை மக்களுக்க வழங்கியமை தொடர்பில் மூன்று அரச நிறுவனங்களுக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.அமீரலி, இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஆகியோரின் தலமையில் புதன் கிழமை (21) நடைபெற்றது இதில் அனைத்து திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போதே இப்பாரட்டு தெரிவிக்கப்பட்டது.
இதன் போது பாராட்டுக்கு உள்ளான மூன்று நிறுவனங்களில் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலை தேசிய உற்பத்தி சிறன் விருதுதினை பெற்று மக்களுக்கு சிறந்த சேவையாற்றியமை, மற்றும் இலங்கை மின்சார சபை தொண்ணூறு வீதமான சேவையினை அனைத்து பிரதேசங்களிலும் வழங்கியமைக்காகவும், மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையும் தனது சேவையினை மக்களுக்காக தொண்ணூறு வீதம் வழங்கியமை தொர்பாகவே இந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதயசத்தியுடன் எம்முடன் இணைந்து செயற்பட்டு கொண்டிருக்கும் திணைக்களங்களுக்கான நன்றியினையும் தெரிவித்தனர்.
அனைத்து திணைக்களங்களும் அடுத்தவருடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போதை வஸ்து பாவனையை ஒழித்து சிறந்த கலாச்சாரத்தினை உருவாக்குவதற்காக திணைக்கங்கள்சார் உதவிகளை எமக்கு வழங்க வேண்டும், இத் திட்டத்திற்காக விசேடமாக 15 இலட்சம் ரூபாய் நிதி அடுத்தவருடம் ஒதுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் அமிரலி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் களுவாஞ்சிகுடியில் இயங்கிவரும் கள்ளுத் தவறணையை உடனடியாக மூடுதல், வீதியல் காணப்படும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினை தடுத்தல், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலைக்கு முன்பாக உள்ள ஆலமரத்தினை உடனடியாக அகற்றுதல், வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதிக்கடவையினை வேறு இடத்திற்கு மாற்றுதல், போன்ற வேலைகள் வருடம் நிறைவுக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments:
Post a Comment