26 Dec 2016

வாகரையில் உள்ளுர் மூலிகைகளைக் கொண்டு பல் சுகாதார நிவாரணி உற்பத்திப் பொருள் தயாரிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் அங்கு கிடைக்கும் உள்ளுர் மூலிகைகளைக் கொண்டு பல் சுகாதார நிவாரணி உற்பத்தி செய்யப்படுவதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தெரிவித்தார்.
திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறு கைத் தொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் சிறு வட்டிக் கடனாக வழங்கப்பட்டது.

இதனைக் கொண்டு பயனாளிகள் இந்த உள்ளுர் மூலிகை நிவாரணி உற்பத்தியை ஆரம்பித்துள்ளார்கள்.

குறிப்பாக வாகரைப் பிரதேசத்தில் போதியளவு கிடைக்கக் கூடிய  பல்நோக்கு மூலிகையான வேம்பு மற்றும் ஆலம் மரம்  என்பனவற்றின் மூலிகைகளுடன் இன்னும் சில மூலிகை சேர்மானங்களையும் உள்ளடக்கி இந்த பற் சுகாதார நிவாரணி தயாரிக்கப்படுகின்றது.

தூள் உற்பத்தியான இந்த பற் சுகாதார நிவாரணி ஒரு பக்கெற்றின் விலை 10 ரூபா என்று நிருணயிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: