மட்டக்களப்பு விவசாயத் திணைக்கள அலுவலர்களால் மட்டக்களப்பு இரத்த வங்கிக்கு 33 பைந்து இரத்தம் தானம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
யார்ட் வீதி, மட்டக்களப்பிலுள்ள விவசாயத் திணைக்கள அலுவலகத்தில் திங்களன்று (26.12.2016) இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் அத்திணைக்களத்தில் பணியாற்றும் 33 அலுவலர்கள் தலா 1 பைந்து இரத்தம் என்ற அடிப்படையில் இரத்தம் தானமாக வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் இந்த இரத்த தானத்தைப் பெற்றுக் கொண்டனர்.
“உதிரம் வழங்கி அடுத்தவரின் உயிரைக் காப்போம்” என்ற இரத்த தான செயற் திட்டத்திற்கு இன மத பேதமின்றி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது மக்களும், அலுவலர்களும், அமைப்புக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கி இரத்த தானம் செய்து வருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment