10 Dec 2016

கோட்டைக்கல்லாற்றில் விபத்து, ஒரேகுடும்பத்தை சேர்ந்த நான்கு போர் படுகாயம்

SHARE

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் இடம் பெற்ற வாகன விபத்தொன்றில் ஓட்டேவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு போர் படுகாயம் அடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.குறித்த விபத்து சம்பவம் தெடர்பாக மேலும் தெரிய வருவதாவது
ஓந்தாச்சிமடத்தில் இருந்து கோட்டைக்கால்றில் உள்ள தங்களது இருப்பிடத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை வீதியை குறுக்கிட்ட போது பின்வந்த  பெற்றொலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான கொள்கலன் மோதியதனாலையே குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இவ் விபத்தில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த நான்குபோர் படுகாயமடைந்துள்ளனர் இதில் இரண்டு குழந்தைகள்,ஒருவயோதிபர் உட்பட குழந்தைகளின் தகப்பனாரான ஓட்டோ சாரதியுமே படுகாயம் அடைந்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வயோதிபர் உட்பட ஒரு குழந்தையையும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்கள்ப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்.

கொள்கலன் சாரதி விபத்து இடம் பெற்ற இடத்தில் நிறுத்தாது சற்று ஓடிச்சென்று தூரத்தில் வாகனத்தை நிறுத்தியதால் கிராமத்தவர்கள் ஒன்று கூடி கொள்கலன் சாரதி மீது மக்கள் ஆத்திரமடைந்த நிலையில் காணப்பட்டதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிசார்  நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன் விபத்து சம்மந்தமாக மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்


SHARE

Author: verified_user

0 Comments: