சுனாமி கடற் பேரலை நிகழ்ந்த 12வது ஆண்டைக் கடக்கும் தொடர் நினைவாக மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள களுவன்கேணிக்
கடற்கரையோரமெங்கிலும் 500 பனம் விதைகளை நடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக களனிப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த “பசுமை நகர்வு”(Go Green) திட்டத்தின் தலைவி வினோஜா சீனித்தம்பி தெரிவித்தார்.
இயற்கையை அனுசரித்து தோழமை பேணும் “பசுமை நகர்வு” எனும் தமது திட்டத்திற்கு அய்செக் (AIESEC) எனும் பன்னாட்டு இயற்கை நேச ஆர்வலர்கள் ஆலோசனைகளையும் அனுசரணையையும் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்கரையோரங்களில் பனம் விதைகள் நடும் தொடர் நிகழ்வுகளில் வெளிநாட்டு இயற்கை நேச ஆர்வலர்களும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment