1 Dec 2016

கல்முனைஉவெஸ்லி,பாடசாலைமாணவர்களின் கிறிஸ்து ஜெயந்திவிழா

SHARE
துறையூர் தாஸன்(சஞ்சயன்)

ஒளிவிழாவைமுன்னிட்டுகிறிஸ்து ஜெயந்திவிழா 2016.11.30அன்றுமுற்பகல் 9.30 மணியளவில்,கல்முனைஉவெஸ்லிஉயர்தரப் பாடசாலைகேட்போர்கூடத்தில்,அதிபர் வடிவேல் பிரபாகரன் தலைமையில் வெகுசிறப்பாகநடைபெற்றது.
இந்நிகழ்வில் வணக்கத்துக்குரியகல்முனைமெதடிஸ்த திருச்சபையின்
பங்குத் தந்தைஅருட்திரு எஸ்.டீ.இனோத் அவர்கள் முதன்மைஅதிதியாகக் கலந்துகொண்டார்.
இயேசுகிறிஸ்துவின் தேவமகிமையும் இறையாட்சியையும் வெளிப்படுத்தும் திருமறைநாடகம்,கல்முனைஉவெஸ்லிஉயர்தரப் பாடசாலைமாணவர்களால்வெகுசிறப்பாககாட்சிப்படுத்தப்பட்டதுடன் ஒளிவிழாகரோல்இன்னிசைகீதங்களும்,நடனநிகழ்வுகளும்மற்றும்இயேசுகிறிஸ்துவின் வல்லமையின் மகிமையும் அளிக்கைசெய்யப்பட்டன.

விசேடதேவையுடையகல்விப் பரிவுப் பாடசாலைமாணவர்களின் ஆடல்,பாடல்,கதை,பேச்சு,,கவிதை,நாடகம் போன்றகலைநிகழ்ச்சிகள் பார்ப்போரை இடையிடையேமேன் மேலும் பரவசத்தில் ஆழ்த்தியது.

வணக்கத்துக்குரியகல்முனைமெதடிஸ்த திருச்சபையின் பங்குத் தந்தைஅருட்திருஎஸ்.டீ.இனோத் அவர்களால் கிறிஸ்து ஜெயந்திவிழாவின் திருவிவிலியத்தின் இறைசெய்திஅருளப்பட்டது.

சிறந்தபெறுபேறுகளைப் பெற்றபாடசாலைமாணவர்கள்,பங்குத் தந்தையால் கௌரவிக்கப்பட்டதுடன் கலையாற்றுகைகள் செய்தபாடசாலைமாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலைமாணவர்கள்,சிறுவர்கள்,பாடசாலைமாணவர்களின் பெற்றோர்கள்,கோட்டக் கல்விஅலுவலர்கள்,பாடசாலைஅதிபர் ஆசிரியர்கள் சமூகஆர்வலர்கள் ,ஊடகவியலாளர்கள் சமூகநலன்விரும்பிகள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன்போதுகலந்துகொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: