1 Dec 2016

மண்முனைப்பற்றுபிரதேசசெயலககலாசாரபேரவைநடாத்தும் ,கலாசாரவிழா -2016

SHARE
துறையூர் தாஸன்(சஞ்சயன்)

மண்முனைப்பற்றுபிரதேசசெயலககலாசாரபேரவைநடாத்தும் ,கலாசாரவிழா -2016 ,இன்று(01) முற்பகல் 9.00 மணிக்குஆரையம்பதிநந்தகோபன் கலாசாரமண்டபத்தில்பிரதேசசெயலககலாசாரபேரவைத் தலைவர் திருமதி.சத்தியானந்திநமசிவாயம் தலைமையில்நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்புமாவட்டஅரசாங்கஅதிபர் திருமதிபீ.எஸ்.எம்.சாhள்ஸ் முதன்மைஅதிதியாகவும் கிழக்குப் பல்கலைக்கழகமுன்னால் நுண்கலைத்துறைபேராசிரியர்சி.மௌனகுருமற்றும்பாரம்பரியக் கலைஞர் கலாபூ~ணம்எம்.கணபதிப்பிள்ளை(மூனாகானா) போன்றோர் சிறப்புஅதிதிகளாகவும்,மண்முனைப்பற்று பிரதேச சபை செயலாளர் என்.கிருஸ்ணபிள்ளை,மண்முனைப்பற்றுமாவட்டவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர்டாக்டர் எஸ்.அல்மைடாமற்றும்ம ண்முனைப்பற்று கோட்டக்கல்வி அலுவலர் திருமதிஎன்.தங்கவடிவேல், அல்ஹாஜ்.எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் மற்றும் மண்முனைப்பற்றுதபால் அலுவலகதபால் அதிபர் திருமதி.வை.லோகேஸ்வரன்போன்றோர் கௌரவஅதிதிகளாகவும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

கலாசாரவிழா,இருமதகலைகலாசாரபண்பாட்டுப் பவனியுடனும் வாழ்க்கைநடைமுறைகளுடனும் ஆரம்பமாகவுள்ளதுஎன்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதேசசெயலகஉத்தியோகத்தர்களின் கிராமியபாடல்,ஆரையூர் கலாமன்றத்தின் கரகம்,வாழ்வியல் பாடலானதலாட்டு,நாடகம்,நடனம்,மற்றும் முஸ்லிம்களின் பாரம்பரியக் கலையானகளிகம்பு(பொல்லடி) போன்றஅளிக்கைவடிவங்களும் அளிக்கைசெய்யப்பட இருக்கின்றன.

மண்முனைப்பற்றுபிரதேசசெயலககலாசாரபேரவையினால் சிகரம் எனும் நூல் வெளியீடும்,நூலுக்கானநயவுரையினைகிழக்குப் பல்கலைக்கழகமொழித்துறைதத் தலைவர் திருமதிரூபிவலன்ரீனாநிகழ்த்தவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலாசாரபேரவையினால் சீ.ஆறுமுகம்,சு.பரசுராமன்,ஜனாப்.அ.லெ.மு.இப்றாஹீம் போன்றகலைஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதுடன் த.இன்பராசா,ஜீ.எழில்வண்ணன் போன்றவர்களும் இளம் கலைஞர்களாகபாராட்டுப் பெறவுள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: