இ.சுதாகரன்
பாடசாலையின் வெற்றி இலக்கானது சமூகம் சார் இடைத் தொடர்புகள் மூலமாக வளர்ச்சிப் போக்கினை அடைகின்றன.தற்போதைய தேசிய கல்விக் கொள்கையானது மாணவர் மையமாகக் கொண்டதாக அமைந்துள்ளமையால் ஆசிரியர்கள் கற்றல் விடயங்களை மாணவர்களுக்கு
போதிக்கும் நிலையிலிருந்து மாற்றமடைந்து மாணவர்கள் விடயங்களை தேடிப் பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர்.இதனால் மாணவர்கள் கற்றல் சார் விடயங்களை தேடி பெற்றுக் கொள்கின்ற மாணவர் மையக் கல்வியாக மாற்றமடைந்துள்ளமையால் மாணவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற போட்டிப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றினை பெறுகின்ற வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் நடைபெற்ற வருடாந்த விளையாட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரு பாடசாலையினை புதிதாக ஆரம்பிப்பது கல்வி நடவடிக்கையினை முன்னெடுப்பது இலகுவான விடயமல்ல எத்தனையோ பாடசாலைகள் பல வருடகாலம் ஆரம்பிக்கப்பட்டு கட்டிட வசதிகள் இல்லாத நிலையில் தற்போது இயங்கி வரும் நிலையில் துரிதமாக வளாச்;சிப் படியினை எய்திய பாடசாலை என்ற பெருமை இப் பாடசாலையினை சாரும்.
இதற்கு காரண கார்த்தா முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பது மெருமைக்குரிய விடயமாகும். அவரை உதவி கேட்டு நாடிய போது எவ்வளவு செலவு வந்தாலும் பாடசாலைக்கான கட்டிடத்தினை வழங்குவேன் என உறுதியளித்தமைக்கு அமைவாக குறுகிய காலத்தில் பல கோடி பெறுமதியான பாடசாலைக் கட்டிடத்தினை வழங்கியிருந்தார்.அவருக்கு இப் பாடசாலைச் சமூகமானது என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.
இப் பாடசாலையானது துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் பழமை போற்றுகின்ற பாடசாலையாக திகழ்கிpன்றமை வரவேற்கத்தக்கது. காரணம் இப் பாடசாலையின் பெயர்தான் மகாவித்தியாலயத்தின் ஆரம்ப பெயராகும்.துரிதமாக வளர்ச்சி கண்டுள்ள இப் பாடசாலையில் முதல் முதலாக தரம் ஐந்து புலலைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றி நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளியினை பெற்றுள்ளமை மாத்திரமன்றி சகல மாணவர்களும் ஏழபது புள்ளிகளுக்கு மேல் புள்ளியினை பெற்றுள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.இவ்வாறான நிலைமை தொடர வேண்டும்.இதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் மட்டற்ற மனமகிழ்ச்சி அடைவதாகத தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment