மட்டக்கள்பபு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து வெள்ளிக்கிழமை (23) காலை விமானத்தின் பெரிய பாகம் ஒன்றை மீட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பெலிசார் தெரிவித்தனர். இவ்விடையம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…..
கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரையில் பெரியதொரு இயந்திரம்போன்றதொரு உருவம் அடைந்து கிடப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் பொலிசாருக்கு மீனவர்கள் அறிவித்ததையடுத்து, இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் கடலில் அடைந்து கிடந்த பொருளைப் பார்வையிட்ட பின்னர் இது விமானத்தின் பாகம் ஒன்று என உறுதிப்படுத்தினர்.
பின்னர் அவ்விடத்திற்கு கடற்படை, மற்றும் விமானப்படையினர் போன்றோர் வரவழைக்கப்பட்டு, அவதானித்தனர்.
மீட்கப்பட்டுள்ள விமானத்தின் பாகம் எந்த நாட்டுக்குரியது என சரியதக அடையாளம் கண முடியாதுள்ளதாகவும், இவ்விமானத்தின் பாகத்தை விவிமானப் படையினர் எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதகவும், இவ்விடையத் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர்.
0 Comments:
Post a Comment