மட்டக்களப்பு-காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில் கடந்த வியாழக்கிழமை (நொவெம்பெர் 24, 2016) மருந்துக் கடை, பலசரக்குக் கடை, தொலைத் தொடர்பு
நிலையம், பாதணிக் கடை என்பன உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருட்டுப் போன சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
புதன்கிழமை (30.11.2016) காத்தான்குடியில் கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபரிடமிருந்து தொலைத் தொடர்பு நிலையத்தில் களவாடப்பட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பிரதான வீதி குட்வின் சந்திக்கு அருகில் சேர் றாசிக் பரீட் மாவத்தையில் அருகருகே அமைந்துள்ள மேற்படி இரண்டு கடைகள் மற்றும் கடற்கரை வீதியில் அமைந்துள்ள மருந்துக் கடை மற்றும் பாதணிக் கடை ஆகியவற்றில் கூரையால் ஏறி உள்நுழைந்து திருடப்பட்டுள்தாக முறையிடப்பட்டிருந்தது. இச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment