ஜனாதிபதி, பிரதமருக்கு எம்மீதான நம்பிக்கையை உயர்த்துவதாக தமிழ் மக்களின் செயற்பாடுகள் அமையவேண்டும், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீது ஒரு அச்சமும் காணப்படுவதை அறியமுடிகின்றது. எனவே இன்று நாட்டை குழப்பாத வகையில் நாம் செயற்பட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
விதவைப் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு முனைத்தீவு பல்தேவை மண்டபத்தில் தமிழரசுக்கட்சின் இளைஞர் அணி செயலாளர் துஸ்யந்தன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (04) நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
நாங்கள் எதிர்க் கட்சியில் இருந்து செய்ய முடியாத வேலைகளையும் செய்து கொண்டு இருக்கின்றோம்.
நாங்கள் கிழக்கு மாகாண சபையினை பொறுப்பெடுத்து ஒரு வருடங்களும் ஒன்பது மாதங்களும் கழிந்துள்ளன மாகாண சபையில் இருந்து ஒரு செயற்பாட்டை சரியாக முழுமையாக செய்ய வேண்டுமாக இருந்தால் ஐந்து வருடங்கள் எமக்கு தேவை எமது மாகாண சபையில் முன்னர் இருந்தவர்கள் ஒழுங்கு விதியின்றி பலதரப்பட்ட வேலைகளை செய்துள்ளனர், அதனையும் நாங்கள் தற்போது சரிசெய்து கொண்டு செல்ல வேண்டிய நிலை எமக்கு இருக்கின்றது முன்பிருந்த இந்த பிழையான வழியில் வேலை செய்பவர்களை நிராரிக்கவே எம்மை வாக்களித்து தெரிவு செய்தனர். எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் சொன்னார் கிழக்கு மாகாண சபையில் தமிழர் இருக்க வேண்டுமாக இருந்தால் அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக மாத்திரம் தான் இருக்க வேண்டும் என்றார் ஆனால் பின்வழியாக ஒருவர் வந்து விட்டார் இதனை ஐனாதிபதி அவர்களும் கூறியிருந்தார்.
நாங்கள் இந்த நாட்டில் சிறுபான்மை இனத்தினை சார்ந்தவர்களாக இருக்கின்றோம் இந்த நாட்டு நாடாளுமன்றத்திலே 225 அசனங்கள் இருக்கின்றது அதில் நாங்கள் 16 பேர் மாத்திரமே இருக்கின்றோம். இந்த இடத்தில் தான் நாங்கள் சிந்திக்க வேண்டும் வித்தியாசமான இடத்தில் நாங்கள் இருக்கின்றோம். இவற்றைவைத்தே எமக்கு தேவையானவற்றை பெறவேண்டும்.
இதனை பெறுவதற்கான வழிகளையே எமது தலைவர் கையாண்டு வருக்கின்றார்.
பௌத்தர்கள் எமது பிரதேசத்தில் கொண்டு பௌத்த சிலைகளை வைக்ககூடாது காரணம் எமது பிரதேசம் இந்து மதம் சார்ந்தது எனவே இதனை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தற்போதைய அரசின் நிலைப்பாட்டில் எமது உரிமை விடயத்தில் சிறு முன்னேற்றம் இருக்கின்றது. இதனை நாங்கள் காண்கின்றோம். அரசியல் வரலாற்றில் தற்பொழுதான் அரசியல் சீர்திருத்தில் தமிழ் மக்கள் விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற வரலாற்று சம்பவம் இடம் பெற்று வருகின்றன. இதனை விட்டால் சந்தர்ப்பம் கிடயாது.
மகிந்த அரசில் இவ்வாறான விடயம் பற்றி சிந்திக்கப்படவில்லை அவர்கள் சிந்தித்ததெல்லாம் இதற்கு மாறாகவே இருந்தது. அரசியின் நிதிகளையெல்லாம் பசில்ராஜபக்ச அவர்களே கையாண்டார், பாதுகாப்பு விடயங்கள் எல்லாம் கேட்டபாய ராஜபக்ச கையாண்டார் தற்போது வெளியான தகவலின்படி கோட்டபாயவின் மகன் அமேரிக்காவிலே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது இந்நிலைமையை மாற்றியமைக்கவே சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எமது தலைவர் சம்பந்தன் அவர்கள் இணைந்து ஓசையின்றி ஆட்சியை மாற்றியமைத்தனர்.
நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்புச் சட்டம் ஆக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படகின்றது. இதன்னூடாக எமக்கு தேவையானதைப் பெற்றுக் கொள்ள இச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அது மாத்திரமின்றி 50 வீதத்திற்கு மேற்பட்ட மக்களினால் இது அங்கிகரிக்கப்பட வேண்டும் இதனை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக நாங்கள் ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போன்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அச்சம் இருக்கின்றது நாங்கள் நாட்டை பிரித்தெடுத்து இந்திய தமிழருடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகின்றார்கள் என்ற அச்சமே அதுவாகும் இந்த மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக மாறவேண்டும் அவ்வாறு இருந்தால் மாத்திரமே எமது உரிமையைப் பெற்றெடுகக்க முடியும் எனவும் இன்றைய காலகட்டத்தில் நாட்டை குழப்பாத அளவு நாம் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment