மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் உள்ள யோகா பயிற்சி நிலையத்தின் கூரையிலிருந்து தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீறாவோடை தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த நடேஷன் நமசுமன் (வயது 26) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார்.
இவர் பேத்தாழையிலுள்ள யோகா நிலையத்தில் கூரைத் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தவறி மண்டை அடிபட கிழே விழுந்துள்ளார்.
மயக்கமடைந்த அவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment