மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சின்னச்சவுக்கடி கிராமத்திலுள்ள நெல் வயலில் இருந்து புதன்கிழமை (28.12.2016) கைக்குண்டு ஒன்றை தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கிராமத்திலுள்ள விவசாயி முத்துலிங்கம் மகேஸ்வரன் என்பவரின் வயலிலேயே இந்தக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவர் தனது வயலில் களை நாசினி தெளித்துக் கொண்டிருந்தபோது இந்தக் குண்டு தென்பட்டவுடன் அது குறித்து அவர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் பொலிஸாரும் அதனை மீட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெறி குண்டு வகையைச் சேர்ந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்
0 Comments:
Post a Comment