சமூகமட்ட வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையிலான இஸ்றிக்கர்கள் வாகனங்களில் ஒட்டும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவாட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் புதன் கிழமை (28) காலை இடம்பெற்றது.
நான் நற்பண்புள்ள சாரதியாவேன், எனது நற்பண்புடனான வாகனச் செலுத்துகை மூலம் எனதும், பிறரினதும், உயிர் மற்றும் உடமைகள் பாதுகாக்கப்படுகின்றன, நான் எப்போதும் பாதுகாப்பான முறையில் வாகனம் சொலுத்துகின்றேன், போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட இஸ்ற்றிக்கர்கள் வாகனங்களில் இதன்போது ஒட்டப்பட்டன. இந்நிலையில் சமூகமட்ட வாகன விபத்துக்களைக் குறைப்பது தொடர்பில் புகைப்படங்களுடனான பதாகை ஒன்றும் களுவாஞ்சிகுடி பிரதான சந்தியில் பொலிசாரால் நடப்பட்டன.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர், போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.சி.இரத்நாயக்க உள்ளிட்ட பொலில் உத்தியோகஸ்த்தர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், தனியார் போக்குவரத்து சங்கத்தினர், இலங்கை போக்குவரத்து சபை உள்ளிட்ட பலர் இதன்போது இணைந்திருந்தனர்.
0 Comments:
Post a Comment