11 Dec 2016

அதிகாலையில் கல்முனைக்குள் கடல்? மக்கள் ஓட்டம்: எங்கும் பரபரப்பு!

SHARE
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் கல்முனையில் கடல் நீர் திடீரென  ஊருக்குள் வந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் அங்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிகாலையில் மக்கள் அலறிக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.
பெரியநீலாவணை பாண்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் கடற்கரையிலிருந்து குடிமனைப்பகுதிக்குள் கடல்வந்துள்ளது

கல்முனைசுனாமி நினைவுத்தூபி பகுதியையும் தாண்டி ஊருக்கள் கடல்நீர் வந்துள்ளதாக அப்பகுதி சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
இன்னமும் அப்பகுதியில் பதற்றம் நிலவுகின்றது. வந்தகடல்நீர் இன்னும் திரும்பிச்செல்லவில்லை. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்னறனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு நாவலடிக் கடல் பிரதேசமும் சனிக்கிழமை (10) வழமைக்கு மாறாக கொந்தழிப்பாகக் காணப்பட்டதாகவும், ஒரு பகுதிக்கு கிராமத்தை நோக்கி கடல்நீர் சிறிதளவு உட்புகுந்ததாகவும், இதனால் அப்பகுதியில் இருந்த சிலர் பீதியின் காரணமாக மட்டக்களப்பு நகர்ப்பகுதிக்கு சென்றுவிட்டதாகவும், அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் வழக்கமாக நாவலடிக் கடலில் மீன் பிடித்து தமது ஜீவநோபாயத்தில் ஏடுபட்டுவரும் மீனவர்களும் சனிக்கிழமையிலிருந்து (09) கடலுக்குச் செல்லவில்லை.


கடந்த 2004 ஆம் அண்டு டிசம்பர் 24 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமிப் போரழிவில் மேற்படி நாவலடிக் கிராமம் முற்றாக கடலலையால் அள்ளுண்டு போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கதகும்.









SHARE

Author: verified_user

0 Comments: