15 Dec 2016

கரவை மு.தயாளனின் நூல்கள் அறிமுக நிகழ்வு

SHARE
(துறையூர் தாஸன்) 

பௌர்ணமிக் கலைநிகழ்வுத் தொடர் -24ஐ சிறப்பிக்கும் வகையில் மட்டு மாநகரசபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கியவட்டம் நடாத்தும் கரவை மு.தயாளனின் (லண்டன்)
சிலமனிதர்களும் சில நியாயங்களும் (நாவல்), எனது பேனாவிலிருந்து… (பல்துறை) ஆகிய இரு நூல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (17) மாலை 4.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர்கூடத்தில் மகுடம் கலை இலக்கியவட்ட ஆலோசகர் பேராசிரியர் செ.யோகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மண்முனைவடக்கு பிரதேச பிரதேச செயலாளர் வெ.தவராஜா அருட்பணி.அ.நவரெட்ணம் (நவாஜி), மட்டுமாநகர சபை ஆணையாளர் மா.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விரு நூல்களுக்குமான அறிமுகவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை விரிவுரையாளர் கோ.குகனும் கவிஞர் த.மேகராசாவும் (மேரா) ஏற்புரையினை நூலாசிரியர் கரவை மு.தயாளனும் நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கான நிகழ்ச்சித் தொகுப்பினை ஜி.எழில்வண்ணனும் வரவேற்புரையினை மகுடம்சஞ்சிகையின் நூலாசிரியர் வி.மைக்கல் கொலினும் நன்றியுரையினை கரவை மு.தயாளனும் நிகழ்த்தவுள்ளனர் 

இந்நிகழ்வில் ரூபா 1000 பெறுமதியான இருநூல்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதையும் துறைசார் நிபுணர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மற்றும் சமூக ஆர்வலர்களை கலந்துகொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர். 





SHARE

Author: verified_user

0 Comments: