10 Dec 2016

மனித உரிமை தினத்தில் மட்டக்களப்பில் மாபெரும் பேரணி

SHARE
மனித உரிமை தினமான டிசம்பர் 10 சனிக்கிழமையன்று மட்டக்களப்பில் மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வ தொண்டர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் பொனவர்களின் உறவினர்கள், என பலர் இதன்போது இனைந்திருந்தனர்.
மட்டக்களப்பு  - திகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள தாண்டவன்வெளி தேவாலயத்திற்கு முன்னால் இருந்து ஆரம்பிக்கப்பட்ட அமைதிப்பேரணி மட்டக்களப்பு காந்தி சதுக்கம் வரைச் சென்றது. பின்னர் மணித உரிமைகளைப்பேணும் வகையிலான கவனத்தை ஈர்க்கப் கூடிய பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிர் வாழ்வதற்கான உரிமையை அரசு உறுதிப்படுத்தமுற்றாக அகற்ற வேண்டும்.
மதச் சுதந்திரத்தைப் பின்பற்றுவதற்குரிய நீதியை உறுதிப்படுத்த வேண்டும்.
சிவில் சமூகத்துடன் இணைந்து நீதியை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.பி. பிளஸை அரசாங்கம் எதுவித தடைகளும் இன்றி அமுல்ப்படுத்த வேண்டும்.

தகவலறியும் சட்ட மூலத்தை மக்கள் மத்தியல் அமுல்ப்படுத்த வேண்டும்.
துன்புறுத்தல்களுக்கான நீதிகளைத் துரிதப்படுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மனித உரிமை ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸிடம் இதன்போர் வழங்கப்பட்டது.













SHARE

Author: verified_user

0 Comments: