23 Dec 2016

மாபெரும் வினைத்திறன் கண்காட்சி

SHARE
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் ஊடாக அமுல்படுத்தும் வினைத்திறன் கண்காட்சி  எல்.ஓ.எச். தேவபுரம் வளாகத்தில் வெள்ளிக்கிழமை (23.12.2016) இடம்பெற்றது.
தொடர்பாடல் திறன் விருத்தி, தனிநபர் சமூக அபிவிருத்தி, அழகியற்கலை விருத்தி, உடல்சார் தேர்ச்சி உட்பட இன்னும் பல விடயதானங்களைத் தொனிப்பொருளாகக் கொண்டு இந்த ஆக்கத்திறன் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டதாக பாலர் பாடசாலைக் கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் கயல்விழி வினோதரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள 128 முன்பள்ளிகளைச் சேர்ந்த 286 ஆசிரியர்களினதும் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன்பள்ளிச் சிறார்களினதும் ஆக்கத் திறன்கள் கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.

இந்நிகழ்வில் கல்குடா கல்வி வலயத்திலுள்ள பாலர் படசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரும் மட்டக்களப்பு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே. சித்திரவேல் பாலர் பாடசாலைக் கல்விப் பணியக வெளிக்கள உத்தியோகத்தர் கயல்விழி வினோதரன் உட்பட இன்னும் பல கல்வி அதிகாரிகளும் பிரதேச சபைகளின் செயலாளர்களும் முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.











SHARE

Author: verified_user

0 Comments: