கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக அந்த மாகாணத்தின் கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபாணி சத்தியப் பிரமாணம் செய்துகொண்;டுள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் அரசதுறைப் பயணமாக கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான நிதி திரட்டும் நோக்கில் திங்களன்று ஈரான் நாட்டுக்குப் பயணமாகியுள்ளார்.
முதலமைச்சர் ஈரானில் 10 நாட்கள் தங்கியிருந்து அரச மற்றும் தொழிலதிபர்களோடு கிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வது சம்பந்மான பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார்.
இதன் காரணமாகவே மாகாணக் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (27.12.2016) நண்பகல் நடைபெற்ற நிகழ்வில், ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் கிழக்கு மாகாண பதில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
0 Comments:
Post a Comment