1 Dec 2016

இன பேதம் என்பதை எதிர்கால மாணவர் சமுதாயம் ஒழிக்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

SHARE
இன பேதம் என்பதை எதிர்கால மாணவர் சமுதாயம் ஒழிக்க வேண்டும் அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுயதொழில் வாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி போன்றவற்றை முன்னெடுப்பதில் கவனம் செலுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மட்டக்களப்பில் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்; கிழக்கு, தெற்கு கல்வி திணைக்களங்கள் இணைந்து நடாத்திய தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அவர் புதன்கிழமை பகல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்டப் பயிற்சிப் பாடசாலைக்கு வந்திருந்தார். 


“சகோதரப் பாடசாலைகளுக்கான வேலைத்திட்டம்” எனும் தொனிப்பொருளில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்கான அலுவலகம் இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. 


காலி, மாத்தறை, கம்பகா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்த கொண்டனர். 
சந்திரிக்கா அம்மையார் மூவின மாணவர்களோடும் அருகருகே அமர்ந்திருந்து அந்யோந்யமாகக் கலந்துரையாடினார். 


இந் நிகழ்வின் நோக்கமானது நாடு முழுவதும் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் ஒவ்வொரு சகோதர பாடசாலையை உருவாக்குதலாகும் என்றும் மாணவர்களிடம் வலியுறுத்திய அவர் இன பேதம் என்பதை எதிர்கால மாணவர் சமுதாயம் ஒழிக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். 



கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபானி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸ் உட்பட இன்னும் பல அதிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.’
SHARE

Author: verified_user

0 Comments: