கொழும்பு மகாவலிகேந்திரத்தில் தேசிய மாநாடு புதன் கிழமை (30) இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்தின, பணிப்பாளர் ரங்க கலன்சூரிய மற்றும் 09 மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்! மைத்திரி
இலங்கையில் முழுநேர அடிப்படையில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை ஊடக தொழிற்சங்கங்களின் ஆறாவது தேசிய மாநாடட்டில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நானும் ஒரு காலத்தில் ஊடகவியலாளனாக செயற்பட்டவன். அந்த வகையில் ஊடகவியலாளர்களின் சிரமங்களை அறிந்தவன்.
நான் அமைச்சராக இருந்த காலம் தொட்டு இன்று வரை என்னால் எந்தவொரு ஊடகவியலாளர்களுக்கும் தொந்தரவுகள் இருந்ததில்லை என்பதை அனைத்து ஊடகவியலாளர்களும் நன்கு அறிவார்கள்.
இலங்கையில் ஊடகத்துறை சார்ந்த ஒருவர் ஜனாதிபதி பதவிக்கு வந்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அந்த வகையில் என் துறைசார் நண்பர்களுக்கு உதவுவது எனது பொறுப்பாகும்.
மேலும் எதிர்வரும் நாட்களில் ஊடகத்துறையினர் எதிர்நோக்கும் சிரமங்களைக் குறைத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment