மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் திங்கட் கிழமை (26) சுனாமி நினைவு தினம் காலையில் 9 மணிக்கு “சுனாமி Baby 81” ஜெயராசா அபிலாஷ் இல்லத்தில்
புதிதாக நிருமாணிக்கட்ட சுனாமி நினைவுத்தூபி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை மட்டக்களப்பு களுதாவளை விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் செயலாளர் ஜி.ஜெயபிரகாஸ் தலமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிர் பிரிந்த உறவுகளின் நினைவாக கட்டப்பட்ட நினைவு தூபியினை சுனாமி
Baby 81 ஜெயராசா அபிலாஷ் திறந்து வைத்தார்.
இதன்போது சுனாமி நினைவு தீபங்களை விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் தலைவர் வை .சந்திரகுமார் மற்றும் விருட்சம் சமூக மேன் பாட்டு அமையத்தின் ஆலோசகரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜி.சுகுணன் அவர்களும் சுனாமி
Baby 81 மாணவனின் தந்தையும் ஏற்றிவைத்தனர்.
சுனாமி Baby 81 ஜெயராசா அபிலாஷ் என்பவருக்கு 11 வருடகாலத்தில் எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்று ஊடகங்கள் வாகிலாக அறிந்து ஒரு மாணவனாக இருந்து கொண்டு தானும் சமூக சேவை செய்யவேண்டும் எனும் நோக்கில் விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஆலோசகர் இராஜதுரை திருமகன்ஸ்ரீ என்பவரின் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் திருமகன் ஶ்ரீ சாயீஷ்வர் எனும் மாணவன் சுனாமி
Baby 81 எனும் மாணவனுக்கு விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் ஊடாக கல்விக்கான நிதியை 12 வருடத்தின் பின் 60000
ரூபாவை இன்றயதினம் இதன்போது வழங்கங்கி வைத்தார்.
ஒரு மாணவனாக இருந்து இன்னொரு மாணவனின் கல்விக்கான நிதியினை வழங்கும் மாணவனை நாம் பாராட்ட வேண்டும். அத்தோடு இவ் மாணவனை எம் சமூகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட்டால் எமது மாணவர் சமூகத்தின் கல்விக்கான செலவுகளை ஈடு செய்ய முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. என இதன்போது களுதாவளை விருட்சம் சமூக மேன்பாட்டு அமையத்தின் செயலாளர் ஜி.ஜெயபிரகாஸ்
தெரிவித்தார்.
கடந்த சுனாமி தாக்கத்தின்போது பிறந்து காணாமல்போய் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தையை பலர் தங்களுடைய பிள்ளை என உரிமை கொண்டாடியபோதும் இறுதியில் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் ஜெயராசா தம்பதியினரின் என அடையாளம் காணப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. அன்றிலிருந்து அக்குழந்தைக்கு சுhனாமி பேபி 81 என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது அபிலாஷிக்கு 12 வயது ஆகும்.
0 Comments:
Post a Comment