27 Dec 2016

செவ்வாய் கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பாசிக்குடாவில் பதிவாகியுள்ளது.

SHARE

செவ்வாய் கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி பாசிக்குடாவில் பதிவாகியுள்ளது.


அந்த வகையில் மட்டக்களப்பு புறநகர் பகுதியில் 56.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரிப் பகுதியில் 12.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,

தும்பங்கேணிப் பகுதியில் 5.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,
மைலம்பாவெளிப் பகுதியில் 34.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடாப் பகுதியில் 76.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 4.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 75.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகரைக் கட்டுமுறிவு பகுதியில் 19.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுமாகம் பகுதியில் 12.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி கே.சூரியக்குரான் செவ்வாய்க் கிழமை (27)  காலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய் கிழமை (27) ஆம் திகத்திக்குப் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதிகளில் சில நாட்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: