சுனாமி பேபி 81’ என்று அழைக்கப்படும் அபிலோஸ் இன் கல்விச் செலவினை பொறுப்பெடுத்த விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர்.
ஆழிப்பேரலையின்போது ஒன்பது தாய்மார் உரிமைகோரிய சுனாமி பேபி 81
என்று அழைக்கப்படும் அபிலோஸ் அவர்களின் கல்விச் செலவினை விருடசம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் சுனாமித்தாக்கமுற்று 12வது நினைவு நாளான
26.12.2016 அன்றிலிருந்து பொறுப்பெடுத்துள்ளனர்.
குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராசா அபிலாஷ் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஜெயராசா அபிலாஷ் அவர்களுக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது.
சுனாமி பேபி 81 என்று பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அபிலாஷ் என்னும் குழந்தை.
ஆழிப்பேரலை ஏற்பட்டபோது ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்குண்டு உயிர் அப்போது பிழைத்த இரண்டரை மாதக் குழந்தையான அபிலாஷ்க்கு ஒன்பது தம்பதியினர் உரிமைகோரியிருந்தனர். கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தற்போது குருக்கள்மடத்தில் வசித்துவரும் ஜெயராசா யுனிதா தம்பதிகளின் அயராத முயற்சியின் காரணமாக மரபணு பரிசோதனை மூலமாக நீதிமன்றத்தின் மூலம் தமது குழந்தைதான் என்பதை நிருபித்தனர்.
அன்று பரபரப்பாக பேசப்பட்ட சுனாமி பேபி 81 இப்போது சுனாமி நினைவு தினத்தில் ஊடகங்களில் பேசப்படுகின்றது. சுனாமி பேபி 81
என்று அன்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அபிலாஷ் அவர்களுக்கு 12
வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை யாரும் உதவ முன்வரவில்லை என்பதனை அபிலாஷ் அவர்களின் பெற்றோர் எமது விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்திடம் தெரியப்படுத்தியதற்கமைய எமது விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் ஆலோசகர் திருமகன் ஸ்ரீ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் மகன் திருமகன் ஸ்ரீ சாயீஸ்வர் எனும் மாணவன் சுனாமி பேபி 81
என்று அழைக்கப்படும் அபிலாஷ்க்கான கல்விக்கான செலவினை ஏற்றுள்ளார். மாதந்தோறும்
5000 ரூபாவினை வழங்க முன்வந்துள்ளார்.
ஒரு மாணவனாக இருந்துகொண்டு இன்னொரு மாணவனுக்கான கல்விச் செலவினை மாதந்தோறும் விருட்சம் அமைப்பினூடாக திருமகன் ஸ்ரீ சாயீஸ்வர் அவர்கள் வழங்க வந்திருப்பது பாராட்ப்படவேண்டிய விடயம் இது ஏனைய இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டும்.
இதன்போது சுனாமி நினைவு தூபி ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேபி 81
அபிலேஸ் பற்றிய சில குறிப்புக்கள்
கடந்த 2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையில் சிக்கி அபூர்வமான முறையில் உயிர்தப்பிய அபிலாஷ், அக்காலத்தில் உலகத்தையே தனது பக்கம் ஈர்த்தவர்.
கடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தம் இலங்கையில் மட்டும் 34
ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர்.
கல்முனையில் கடற்கரையோரம் பிறந்து இரண்டரை மாதங்களே ஆன ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. தென்னைமர வட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச் சென்று வைத்து பின்னர் அடுத்த அலையில் குப்பை மடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
சுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் இக் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.
இக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட (வாட்) விடுதி இலக்கம் 81
ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது. இக்குழந்தைக்கு உரிமை கோர எவருமில்லை என அறிந்த பலர் அக்குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு இது தனது குழந்தை தான் எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கினர்.
ஒரு குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரி வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கியதையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் இவ்விட்யத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.
இறுதியில் நீதிமன்றம் மரபணு பரிசோதனை மூலம் குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து குழந்தையை உரிய பெற்றோர்களிடம் அன்று கையளித்திருந்தது.
கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த் ஜெயராஜ் யுனிதா தம்பதிகளின் புதல்வன் ஜெயராஜ் அபிலாஷ் என மரபணு பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது.
0 Comments:
Post a Comment