சுனாமி அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 12 வருடங்கள் கடந்த போதிலும் அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் இன்றுவரை அரசாங்கத்தினால் பூர்த்தி செய்து கொடுக்கப்படாது உள்ளது என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.
அம்பாறை திருக்கோவில் சுப்பர்ஸ்டார் விளையாட்டு கழகத்தினால் இன்று 26ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்த 12வது சுனாமி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்டத்தில் இன்று மக்கள் வசதியற்ற நிலையிலும், வீடுகள் இல்லாது தற்காலிக கொட்டில்களிலும் பல துன்பங்களுக்கு மத்தியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாது வீடுகள் வழங்கப்பட்டவர்களுக்கு அவ்வீட்டு காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் கூட வழங்கப்படாது உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு இந்த அரசு அடுத்த வருடத்திற்குள்ளாவது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விசேட திட்டங்கள் மூலம் அவர்களுக்கான வீடுகள் நிர்மானித்தக் கொடுப்பதுடன் வழங்கப்படாத காணி உறுதிப்பத்திரங்கள் போன்றவற்றை வழங்குவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்
உயிர்களை, சொத்துக்களை இழந்து வாழ்ந்தவரும் மக்கள் தொடர்ந்தும் அந்த வடுக்களுடன் வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்காது அந்த பாதிப்பில் இருந்து மீண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இந்த அரசாங்கத்தினை கேட்டுக் கொள்ளுகின்றேன் என தெரிவித்தள்ளார்.
0 Comments:
Post a Comment