6 Dec 2016

பதவிக்காலத்தில் மரணமடைந்த 3வது முதல்வர் ஜெயலலிதா

SHARE
தமிழக அரசியலில் பதவிக்காலத்தின் போது காலமான 3வது முதல்வர் ஜெயலலிதா.
தமிழக முதல்வர்களில் இதுவரை பதவியில் இருந்தபோது உயிரிழந்தவர்கள் மொத்தமே 3 பேர்தான். அதில் அண்ணா திமுகவைச் சேர்ந்தவர். மற்ற இருவர் அதிமுக முதல்வர்கள் ஆவர்.

திமுகவை நிறுவியவரான பேரறிஞர் அண்ணா, கடந்த 1969ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது மரணமடைந்தார்.
தமிழகத்தின் முதல் திராவிட முதல்வர் அண்ணாதான். அதைத் தொடர்ந்து 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது உயிரிழந்தார். அதிமுகவை நிறுவியவர் எம்.ஜி.ஆர்.
இந்த நிலையில் தற்போது முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோதே மரணத்தைச் சந்தித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: