(துறையூர் தாஸன்)
சர்வதேசகதிரியக்கவியல் தினத்தை(கார்த்திகை 08 ) சிறப்பிக்கும்வகையில்,கதிரியக்கவியல் பிரிவுமற்றும் சுகாதாரக் கல்விப் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்டவிழிப்புணர்வுக் கருத்தரங்கு08.11.2016
அன்றுகல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில்,வைத்தியஅத்தியட்சகரின் ஆலோசணைகளுடனும் கதிரியக்கவியல் வைத்தியநிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் டிலக்குமார் அவர்களின் தலைமையிலும்நடைபெற்றது.
மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை இனங்காண்பது எவ்வாறெனவும் அந்நோயிலிருந்துஆரம்பத்திலேயேவிடுபடநாம் எவ்வாறான நடிவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்றவிளக்கம் கதிரியக்கவியல் வைத்தியநிபுணர் டாக்டர் சுந்தரலிங்கம் டிலக்குமார் அவர்களாலும்,மார்பகப் புற்றுநோயை இனங்காணும் மமோகிறாபிபரிசோதனைபற்றியவிளக்கம் பொதுச் சத்திரசிகிச்சைநிபுணர் டாக்டர் ரீ.ஆர்.நிமலரஞ்சன் அவர்களாலும் விசாலமாகவிளக்கம் அளிக்கப்பட்டது.
பொதுசத்திரசிகிச்சைநிபுணர் தனது உரையில்,இலங்கையில் பெண்களை அதிகமாகபாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதன்மைவகிக்கிறதுஎனவும் இலங்கையில் ஒரு இலட்சத்தில், 25 பெண்களுக்குமார்பகப் பற்றுநோய் இருப்பதாகஆய்வுகளில் தெரியவருவதுடன்,ஆரம்பநிலையில் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்கானவழி முறைகள் பற்றியும் அதற்கானசிகிச்சைமுறைகள் பற்றியும்,பெண்கள் தங்களதுமார்பகங்களில் ஏதேனும் வித்தியாசத்தைஉணர்ந்தால் உடனடியாகமருத்துவரைநாடுவதுடன் சுய மார்பகப் பரிசோதனையை எப்போது எவ்வாறு செய்யவேண்டும் என எளியமுறையிலானவிளக்கமும் அளிக்கப்பட்டது.
கதிரியக்கவியல் மருத்துவநிபுணர் தனது உரையில், கதிரியக்கவியல் தின அறிமுகத்தினையும், மார்பகப் புற்றுநோயைகண்டறிவதற்கான கதிரியக்கவியல் தொழிநுட்பங்களின் பங்களிப்புபற்றியும்,குறிப்பாக ULTRA SOUND SCAN,MAMMOGRAME,MRI,PETபற்றியவரிவானவிளக்கங்களும்,அதன் முக்கியத்துவங்கள் பற்றியும் அதனால் நோயாளிகள் பெறும் நன்மைபற்றியும்,விரிவாகவிளக்கமளித்தார்.அதாவது 20 வயதுதொடக்கம் 30 வயதுக்குட்பட்டபெண்கள் சுய மார்புப் பரிசோதனைசெய்வதுமிகவும் அவசியம் எனவும் 30 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டபெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கானஅறிகுறிகள்,சந்தேகமிருப்பின் ULTRA SOUND,MRI பரிசோதனை என்பனவும்45 வயதுக்குமேற்பட்டவர்கள் கட்டாயமாக MAMMOGRAME பரிசோதனையைகட்டாயமாகஒவ்வொருவருடமும் செய்துபார்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மார்பகப் புற்றுநோயைஆரம்பத்திலேயேகண்டறிந்துஅதைஅகற்றுவதுமிக இலகுவாகஅமைவதுடன் MAMMOGRAME ஆநுபரிசோதனையின் போதுஉங்களுக்குஒருபெண் கதிர்ப்படபரிசோதனையாளர் கதிர்ப் படஅறைக்கு அழைத்துகதிர்ப்படத்தைபதிவாக்குவார்.ஆகையினால் நாங்கள் எந்தவித அச்சமும் கொள்ளத்தேவையில்லைஎனவும், கிழக்கிலங்கையிலேயேகல்முனைவடக்கு ஆதாரவைத்தியசாலையில் மாத்திரமே MAMMOGRAME பரிசோதனைசெய்வதற்கானதொழில்நுட்பவசதிகள் உள்ளதெனவும்,மமோகிராம் பரிசோதனையை இலவசமாகமேறக்கொள்ள இருப்பவர்கள்கல்முனைவடக்கு ஆதாரவைத்தியசாலையைஅணுகலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வின் அதிதியாககலந்து கொண்டகளுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் கு.சுகுணன், தனதுஉரையில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையானது கடந்தநான்கு வருடகாலமாகபாரிய முன்னேற்றத்தை அடைந்துவருவதற்குவைத்தியசாலைநிர்வாகமுகாமைத்துவமே மூல காரணமெனவும்,2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில்; சுகாதாரஅமைச்சினால் நடாத்தப்பட்டபாரியளவிளாலானசத்திரசிகிச்சைகளின் தரவரிசைப்படுத்தலின் படிகல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையானதுஅகில இலங்கைரீதியில் இரண்டாம் இடத்தினையும்,கிழக்குமாகாணத்தில் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளதுஎமதுதமிழ்ச் சமூகத்துக்குபெருமைக்குரியவிடயம் எனவும்,மார்பகப்புற்றுநோயினைஆரம்பத்திலேயேகண்டறிந்துஅதற்கானசிகிச்சைகளைபெறஎமதுசமூகம் தயக்கம் காட்டக்கூடாதுஎனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் கல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன்,களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்தியசாலையின் வைத்தியஅத்தியட்சகர் கு.சுகுணன், அஸ்ரப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் பதில் வைத்தியஅத்தியட்சகர் மற்றும் கல்முனைப் பிராந்தியத்திலுள்ளஏனைய வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர்கள், வைத்தியநிபுணர்கள், அலுவலர்கள்,தாதியஉத்தியோகத்தர்கள்,சுகாதாரஉதவியாளர்கள் உள்ளிட்டபலதரப்பட்டோர் இதன் போதுகலந்துகொண்டுநிறைவானதெளிவுபெற்றனர்.
0 Comments:
Post a Comment