9 Nov 2016

பெருந்தெருக்கள், விபத்துஅனர்த்த முகாமைத்துவ ஒத்திகை

SHARE
(துறையூர் தாஸன்) 

கல்முனைவடக்குஆதாரவைத்தியசாலையினால்,பெருந்தெருக்கள் விபத்து அனர்த்த முகாமைத்துவ ஒத்திகைசெவ்வாய்க்கிழமை(08.11.2016 ) பி.ப 2.00 மணிக்குகல்முனைவடக்குஆதாரவைத்தியசாலை தரமுகாமைத்துவப் பிரிவினால் நடாத்தப்பட்டது.
இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குசொந்தமான பஸ் ஒன்று பாண்டிருப்பு பிரதானவீதியின் ஊடாக(ஏ4)பயணிக்கும்போதுபி.ப 2.00 மணியளவில் பாரியகனரகவாகனத்துடன் நேருக்குநேர்மோதிவிபத்துக்குள்ளானது. இச்சம்பவ இடத்திலே யேசுமார் முப்பதுக்குமேற்பட்டோர் பலத்தகாயங்களுடன் விபத்துக்குள்ளாகிகல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்ட நிகழ்வை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மிகவும் தத்ரூபமானமுறையில் நிகழ்;த்திக் காட்டினர்.

அதாவது இவ்வாறானநிகழ்வுகள் உண்மையாக நிகழும் போது இலங்கைப் போக்குவரத்துப் பொலிஸார் எவ்வாறு யதார்த்தமான விடயங்களை அவர்களது அலுவலகத்து அறிவித்து அதன் ஊடாக அருகிலுள்ள வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அறிவித்து நடைமுறைச் சாத்தியப்பாடுகளை எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பதையும் மக்களுக்காகசேவை செய்யும் அரச, அரசசார்பற்ற உத்தியோகத்தர்கள் திடீரெனநிகழும் இயற்கை, செயற்கை அனர்த்ததின் போது எவ்வாறு செயற்படுவதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்து முகமாகஅமைந்திருந்தது. 

வைத்தியசாலையில் பணியாற்றுபவர்கள், இவ்வாறான அனர்த்தங்களின் போதுபாதிக்கப்பட்டு வரும் நோயாளர்களை எவ்வாறு வகைப்படுத்தி முகாமைசெய்யலாம் என்;பதையும் தத்தமதுவேலைகளைவிவேகத்துடன் செய்வதற்குஆயத்தமானநிலையில் இருக்கவேண்டும் என்பதைசெயற்பாடுகள் ஊடாககாணமுடிந்தது.

வைத்தியசாலைஉத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் அனர்த்தமுகாமைத்துவத்தின் போதுதத்தமக்குரியவிசேடமானஉடைகளுடன் காட்சியளிப்பதுடன் பொதுவாகஅனர்த்ததுக்குள்ளாகிஅனுமதிக்கப்பட்;ட அனைத்துநோயாளர்களையும் சமாந்தரமாகஅதிதீவிரசிகிச்சைப் பரிவில் கண்காணிப்பில் வைத்திருப்பதுடன் அதிமுதன்மையானசத்திரசிகிச்சைக்குஉட்படுத்தவேண்டியநோயாளர்களையும் நன்குகவனித்துஅவர்களதுஉடமைகள்ஒழுங்கானவிதத்தில் அளிக்கப்படுதல் போன்றவற்றைஒத்திகைக்குஊடாகஅறியமுடிந்தது.

வைத்தியசாலை சேவையாளர்கள் உணர்வுபூர்வமாகவும் மனிதாபிமானமாகவும் எவ்வாறுபணியாற்றவேண்டும் என்பதையும் ,வாகனசாரதிகள் வீதிஒழுங்குவிதிகளைஎவ்வாறுகடைப்பிடிக்கவேண்டும் என்பதையும்,வீதிஒழுங்கினைப் முறையாகபேணும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடம் பொருள் ஏவல் அறிந்துஎவ்வாறுசெயற்படவேண்டும் என்பதையும்நிகழ்ந்தசம்பவத்தைசம்பவஇடத்துக்குச் சென்றுஅதைதிரிவுபடுத்தாமல் தத்ரூபமாகஉலகுக்குதெரியப்படுத்தும் ஊடகவியலாளர்களின் முறையானபணிகள் என்பவற்றைஅனர்த்தமுகாமைத்துவஒத்திகைவலியுறுத்துவதாக இருந்தது.











SHARE

Author: verified_user

0 Comments: