2016 ஆம் ஆண்டிற்கான மாணவர் நாடாளுமன்றத் தேர்தல் மட்.பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் புதன் கிழமை (09) மிகவும் உயிரோட்டமான முறையில் நடைபெற்றது.
தரம் 6-9 வரையான மாணவர்களுக்கு வேறாகவும் தரம் 10-13 வரையான மாணவர்களுக்கு வேறாகவும் நடைபெற்றது. இரண்டில் இருந்தும் 124 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். இரண்டு பிரிவுகளில் இருந்தும் மொத்தமாக 90 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்தலுக்கு உதவித்தேர்தல்கள் ஆணையாளராக அதிபர் எஸ்.உதயகுமார் அவர்கள் கடமையாற்றியிருந்தார். ஏனைய உத்தியோகத்தர். எழுது வினைஞர்களாக ஆசிரியர்கள் கடமையாற்றினர்.
0 Comments:
Post a Comment