HINDFOS AID அமைப்பினர் கனகராயன்குளம் குறிசுட்டமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், பாடசாலை சீருடையும் வழங்கும் நிகழ்வில் அவ் அமைப்பின் தலைவர் நா. அருண்காந்த் மற்றும் வன்னி மன்னார் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களும், இவ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் பொன் சந்திரபோஸ் அவர்களும், தேசிய ஆலோசகர் ராசையா செல்லையா அவர்களும், வவுனியா நகர அமைப்பாளர் இமையவன் அவர்களும் பாடசாலையின் இன்னிய குழுவினரால் வரவேற்கப்படுவதை முதலாவது படத்திலும்,
அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதை இரண்டாவது படத்திலும் அருண்காந்த் அவர்கள் கற்றல் உபகரணங்கள் வழங்குவதை மூன்றாவது படத்திலும் சந்திரபோஸ் அவர்கள் சீருடை வழங்குவதை நான்காவது படத்திலும், ராசையா செல்லையா அவர்கள் பொருட்கள் வழங்குவதை ஐந்தாவது படத்திலும், கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிதிகளுடன் காணப்படுவதை ஆறாவது படத்திலும் காண்க.
0 Comments:
Post a Comment