20 Nov 2016

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாகஉள்ள நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள்.

SHARE
மட்டுமாவட்டத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ள நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள். 

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள்தடையாகச் செயற்படுகின்றன என நிதிநிறுவனங்களால் பாதிக்கப்பட்ட ஒருமட்டு நகர் வாசி எழுதிய கடிதத்தினை இங்கு குறிப்பிடுகின்றோம்.
மட்டக்களப்பு வாழ் புத்தி  ஜீவிகளே வங்கி மற்றும்  நிதி நிறுவன தலைவர்களே
அரசியல் தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளே
அனைவருக்கும் எனதுவணக்கங்கள்.  

மட்டக்களப்பில் வசிக்கின்ற மட்டு நகரான் (உண்மையானபெயர் குறிப்பிடப்படவில்லை) ஆகியநான் ஒரு உற்பத்தித் திட்டத்தினைமேற்கொண்டு மாவட்டத்தின் பொருளாதாரஅபிவிருத்தியின் ஒருபங்காளியாகவர வேண்டும் என்றஎண்ணத்தினைசெயற்படுத்துகின்ற போது எதிர்கொண்ட சவால்களையும் தடைகளையும் இங்கு குறிப்பிடுகின்றேன் இந்தக் குறிப்புகள் என்னைப் போன்ற ஆர்வ முள்ளவர்களுக்கு பயனுள்ளதாகவும் மேலேநான் முகவரி இட்டவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தியின்பால் உண்மையான அக்கறை கொள்வதற்கும்உறுதுணையாக அமையும்  எனவும்நினைக்கின்றேன்.

உற்பத்திமற்றும் வர்த்தகதுறைகளில் ஈடுபட்டு ஒருபெரிய தொழிலதிபராகவர வேண்டும் என்பதேசிறுவயது தொட்டு எனக்கிருந்த அவாவாக இருந்தது. இதன் காரணமாகத்தான் நான் வணிகத்துறையில் பட்டம் பெற்று வியாபார நிருவாகத்துறையில் முதுமானிப்பட்டப்படிப்பினை தொடர்ந்து கொண்டு இருக்கின்ற பொருளாதார அபிவிருத்தியில் ஆர்வமுள்ள சமூக சேவையிலும் அலுவலகநிருவாகம் மற்றும் கணினித் துறையில் அதிககாலம் அனுபவமுள்ளவனுமாகிய அரச உத்தியோகத்தினை விரும்பாதவனாகக் காணப்பட்டேன்.

எனது இந்த இலட்சியத்தினை2017 இல் ஆவது (எனது 50 வதுவயதில்)  எப்படியாவதுஅடையவேண்டும் என்றஎண்ணத்தினால் தற்போதுமட்டக்களப்பில் என்னதொழில் முயற்சியினைத் தொடங்கலாம் எந்நதொழிலில் அதிக இலாபத்தினைப் பெறலாம் என்பவற்றினைஎல்லாம் பலமுறைஆராய்ந்ததன் பிற்பாடு இரசாயணமருந்தற்றவிவசாயம் கால்நடைவளர்ப்புவியாபாரம் ஏற்றுமதிப் பொருட்கள் உற்பத்திபோன்றசெயற்பாடுகளைஉள்ளடக்கியவாறுஒருதனியார் கம்பனியைகடந்த (2015) வருடம்ஆரம்பித்தேன்.

அதன் அடிப்படையில் முதலில் கால்நடைஉற்பத்தியைமேற்கொள்ளும் பொருட்டுபத்தாயிரம் முட்டைக் கோழிகளைவளர்க்கும் திட்டம் ஒன்றினை 18 மில்லியன் செலவுதிட்டத்தில் தயார் செய்துஅதற்கானஇடத்தினையும் தெரிவுசெய்தேன் பின்புஅதற்கானநிதியினைப் பெற்றுக்கொள்வதற்காகபலவங்கிகளையும் பலநிதிநிறுவனங்களையும் ஏறி இறங்கினேன் குறித்தஉற்பத்தித் திட்டத்தினைப் பற்றியும் 5 வருடங்களுக்கானவியாபாரத் திட்டத்தினைப் பற்றியும் பலவாறுவிக்கமளித்தேன் சிலர் திட்டத்தின் பிரதிஒன்றினைப் பெற்றுக்கொண்டுதலமைக் காரியாலயம் அனுப்பிஅனுமதிபெறுவதாகக் கூறினார்கள் சிலரோ“கோழிவளர்ப்பா? இதற்கு இவ்வளவுதேவையா? கோழி இறந்தால் என்னசெய்வது! இதற்குதரமுடியாதுஎன்றனர் இறுதியாகமட்டக்களப்புமக்கள் வங்கியின் பிரதேசகாரியாலயத்தில் இருக்கின்றசிறியமற்றும் நடுத்தரஉற்பத்தியாளர்களுக்குகடன் வழங்குகின்றபிரிவிற்குச் சென்றேன்.

அங்குஎன்னைவரவேற்றார்கள் திட்டத்தைப் பற்றிவிளக்கினேன் இடத்தினைப் பார்வையிட்டார்கள் வேலையினைத் தொடங்குமாறும் குறித்ததிட்டத்திற்குநிதிஉதவிவழங்குவதாகவும் கூறியஅவர்கள் ‘குறித்தகடனுக்கானபாதுகாப்பிற்காகஉங்களதுமட்டக்களப்பில் இருக்கின்றவீட்டையேஅடைமானமாகவழங்கவேண்டிவரும்”எனவும் கூறியபோதுநான் சொன்னேன் வீட்டின் மிகுதிவேலைகள் முடிப்பதற்காகஅந்தவீடுஏற்கனவேஅரசஈட்டுமுதலீட்டுவங்கியில் அடைமானமாகவைத்திருக்கிறோம்.
 எனவேதிட்டம் ஆரம்பிக்கின்றகாணியையேபாதுகாப்பிற்காகபெற்றுக்கொள்ளுமாறும் கூறினேன் அதைபரிசீலிப்பதாகக் கூறினார்கள். ஆனால் நான் கடந்த ஜனவரிமாதம் அதற்கானவேலையினைத் தொடங்கினேன் அதேநேரம் வங்கியினால் கோரப்பட்டஆவணங்களையும் சமர்ப்பித்தேன்.

ஆனால் கடனுக்கானபாதுகாப்பிற்காகஎனதுவீட்டையேவங்கிகோரியதுஆனால் வீட்டைஅரசஈட்டுமுதலீட்டுவங்கியில் இருந்துமீட்பற்குஎனக்கு 1 மில்லியன் தேவைப்பட்டதுஅந்தப் பணத்திற்காக இரண்டுமாதங்கள் அலைந்தேன் பலதனியார்களைநாடினேன் இறுதியில் அதிகவீதமாதவட்டிக்குஅந்தப் பணத்தினை (எனதுகம்பனியின் காசோலையினைபிற்திகதியிட்டுவழங்கி) ஒருவரிடம் இருந்து பெற்றுகடனை முழுமையாகமீளளிப்புச் செய்து பத்திரத்தினை மக்கள் வங்கியில் வழங்கினேன்.

குறித்தஎங்களதுகாணி உறுதியானது அரசினால் வழங்கப்பட்டசுவர்ண பூமி உறுதி என்பதால் பிரதேச செயலாளரின் அனுமதி பெறுவதற்காக சென்றேன் அப்போது உதவிப் பிரதேசசெயலாளர் குறித்தகாணியை வங்கியில் ஈடு வைக்கமுடியாது எனக்கூறி எனது ஆவணங்களை வீசிஎறிந்தார் (காணிசம்பந்தமான அறிவற்றஉதவிப் பிரதேசசெயலாளர்) பின்புபிரதேசசெயலாளரிடம் நான் முறையிட்டபோது அவர் காணி உத்தியோகத்தரை அழைத்து அனுமதி வழங்கஆவணங்களைச் சரிசெய்யுமாறுபணித்தார் அப்போது இன்னு மொருபிரட்சினையை எதிர்கொண்டேன்.

எங்களதுகாணிகச்சேரியில் பதியப்படும்போதுஅங்குள்ளகாணி இடாப்பில் லொட் நம்பர் பிளையாகஎழுதப்பட்டிருந்தது (பொறுப்பற்றதகுதியற்றஎழுதுவினைஞர்கள்) இதைத் திருத்துவதற்காகபெரிது கஸ்ரப்பட்டேன் பின்புதிருத்திஎடுத்தேன்.

சகலஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்து இரண்டு வாரத்தின்பின்பு கடனுக்காக கையொப்பமிடச் சென்றேன் அன்று இன்னுமொரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்ததுதிட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தவாறு முதலாவது கட்டத்திற்கு 5 மில்லியன் வங்கி வழங்க வேண்டும் ஆனால் 3 மில்லியனே தற்போது வழங்குவதாகவும் மிகுதி 2 மில்லியனும் மத்திய வங்கியின் ஸ்மைல் பிளஸ் என்ற திட்டத்தில் சிறிதுகாலத்தில் வட்டி இல்லாமல்  வழங்கலாம் எனவும் குறிப்பிட்டார்கள்.

நான் அப்போதுஅதிர்ச்சிஅடைந்தேன் காரணம் அப்போது 7 மில்லியனுக்குமேல் வேலைகள் முடிந்திருந்ததுஅவற்றில் 5 மில்லியன் தனியார்களிடம் கடனாகபெற்றுக்கொண்டதேயாகும் வங்கிகடன் வழங்கியவுடன் மீழவழங்குவதாகதெரிவித்தேஅவர்களிடம் கடன் பெற்றேன்.

பின்புகையொப்பமிட்ட 3 மில்லியனையேவங்கிஎனக்குவழங்கவில்லை 1.5 மில்லியனைவழங்கிவிட்டுமிகுதியைவேலையின் முன்னேற்றத்தினைப் பார்த்தேவழங்குவதாகக் கூறினார்கள்வங்கியில் பெற்றுக்கொண்ட 1.5 மில்லியன் பணத்தில் 1 மில்லியனைஏற்கனவேவங்கியில் பெற்றகடனைஅடைப்பதற்காகவாங்கியபணத்தினைகொடுத்துவிட்டு 5 லெட்சம் ரூபாயேகுறித்ததிட்டத்திற்காகவங்கியினால் எனக்குக்கிடைத்திருந்தது.

பின்புபொருட்கள் கொள்வனவிற்காக (கோழி)நேரடியாகவங்கியினால் 6 லெட்சம் வழங்கப்பட்டது இன்னும் 8 லெட்சம் வேலைகள் பூர்தியானால் வங்கிவழங்குவதாகக் கூறுகின்றது. வேலைகள் 5 மாதங்களாகஅப்படியேதடைப்பட்டுள்ளது. நான் கடன் வாங்கியதனியார்களுக்குமாதாந்தம் வட்டியைவளங்கிவந்தநான் தற்போதுஅதையுமேவளங்கமுடியாதநிலைக்குத் தள்ளப்பட்டுகடன் வளங்கியவர்களின் தொந்தரவுகளுக்கும்உள்ளாகிஅவர்களினால் சட்டநடவடிக்கைக்கும் உட்பட்டுள்ளேன்.

18 மில்லியன் திட்டசெலவில் 16 மில்லியனை 3 கட்டமாகவழங்குவதாகக் கூறிய வங்கியினால் வெறும் 1 மில்லியனையே என்னால் பெறமுடிந்துள்ளது திட்டத்தின் முதலாவது கட்டத்தினை பூர்த்திசெய்வதற்கு இன்னும் 1 மில்லியன் பணம் தேவைபூர்த்தி செய்தால்தான் வங்கி மிகுதிபணத்தினை வளங்கும் இந்தப்பணத்தினை யாரிடம் இருந்து பெறுவது ஏற்கனவேகடன் வளங்கியவர்களுக்குதிருப்பிக் கொடுக்காததால் பிரட்சினைகளைஎதிர்கொண்டுள்ளஎனக்கு இது சாத்தியமாகுமா? 

திட்டம் முழுமையாகநடைமுறைப்படுத்தப்பட்டுஅதனால் பயன் பெறும்போதுமாதாந்தம் 1.5 மில்லியனைவருமானமாகப் பெறலாம்எனவியாபாரத் திட்டம் கூறுகின்றது இதனால் மிகுந்தஅவாவுடன் என்னால் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் தற்போது 5 மில்லியன் ரூபாய்கள் தனியார்களிடம் இருந்துகடனாகப் பெற்றதனால் அவர்களின் சட்டநடவடிக்கைக்குஉட்பட்டவனாய் குறித்ததிட்டத்தினை3 ஏக்கர் காணியுடன் சேர்த்துவிற்கவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன் மேலும் வங்கிவளங்கியகடனுக்கு 3 மாதங்கள் விடுப்புவளங்கப்பட்டுதற்போதுஅவற்றையும் மீளச் செலுத்தவேண்டியவனாய் உள்ளேன் ஆனால் வங்கியில் எமதுமிகுதிப்பணம் இருப்பதனால் அதிலிருந்துகழிக்கப்படுகின்றது.

வங்கியினால் ஏமாற்றப்பட்டதன் பின்புபலதொழிலதிபர்கள் பலநிதிநிறுவனங்கள் பலபுலம்பெயர் நண்பர்கள் எல்லோரிடமும் முதலீட்டுப் பங்காளியாகசேர்த்துக்கொண்டுதிட்டத்தினைசெயற்படுத்தமுயற்சிஎடுத்தேன் அவற்றிலும் ஏமாற்றமேஅடைந்தேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் சிறியமற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் தங்களது முயற்சியாண்மையினை விருத்திசெய்வதற்கு அல்லது புதிதாக ஒரு தொழிலைத் தொடங்குவதற்கு வங்கிகளினால் ஒருசிறிய அளவில்தான் உதவிசெய்யமுடிகின்றது. 

இங்குள்ளவங்கிகளின் அல்லதுநிதிக் கம்பனிகள் ஒரு சில தொழிலதிபர்களுக்கு மாத்திரம் அதிகளவானகடன் வழங்குவதனைத் தவிர அரசாங்க உத்தியோகத்தர்களுக்குகடன் வழங்குவதும் நகை ஈடு பிடிப்பதும் பாமரமக்களை ஏமாற்றி அவர்களுக்குநுண்கடன் வழங்குவதும்தான் அவைகளின் பிரதானநோக்கமாகஉள்ளதைக் காண்கின்றோம்.

வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளின் பிரதானநோக்கம் இவ்வாறு இருந்தால் மாவட்டத்தின் அபிவிருத்திஎன்பதுஎவ்வாறுசாத்தியமாகும்? வங்கிகள் தொழில் முயற்சியாளர்களுக்குஉரியவாறுகடன் வழங்கினால் அவர்கள் ஏன் கந்துவட்டிக் காரர்களைநாடிச் செல்கின்றனர்.

மேலும் ஒருவங்கி ஒருதிட்டத்திற்குகடன் வழங்கும்போது அந்தத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான முழு நிதியினையும் வழங்கவேண்டும் அல்லதுஅந்தத் திட்டத்திற்குநிதிவழங்கக்கூடாது. 

வங்கிகளின் இந்தமுறையற்றசெயற்பாடுகளினால் இளம் தொழில் முயற்சியாளர்கள் முளையிலேயேகிள்ளிவீசப்படுகிறார்கள் இதனால்தான் இளைஞர்கள் சுயதொழில் செய்வதற்குதயங்குகிறார்கள் இதனால் அவர்கள் அரசதொழிலையேஎதிர்பார்த்துபலஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.

மாவட்டத்தின் வறுமைஒழிக்கப்படவேண்டும் பொருளாதாரஅபிவிருத்திஏற்படவேண்டும் எனபலராலும் கூறப்படுகின்றதுஆனால் அதற்கானசரியானதொழில் நுட்பங்களைகையாழ்வதற்குயாரும் முன்வருவதில்லை.

மாவட்டவறுமை ஒழிப்பிற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் வங்கிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என அரசாங்க அதிபரால் பல முறை வேண்டு கோல் விடுக்கப்பட்டாலும் எந்தவொருவங்கியோஅல்லதுநிதிக் கம்பனிகளோ அவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை காரணம் அந்த நிதிநிறுவனங்கள் அனைத்தும் மத்தியவங்கியின் அனுமதிபெற்றுள்ளதால் அரசாங்க அதிபரால் ஒன்றுமே செய்யமுடியாதுள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்களும் மக்களும் விளிப்படையவேண்டும் வங்கிகள் ஒருசில தொழிலதிபர்களை மாத்திரம் இலக்கு வைத்துதங்களது நிதிச் சேவைகளைமேற்கொள்ளக்கூடாது இதனால் வருமான ஏற்றத்தாழ்வுதான்  ஏற்படுமே ஒழியஅபிவிருத்தி ஏற்படாது.  

இங்ஙனம்
அன்புள்ள
மட்டுநகரான்.



SHARE

Author: verified_user

0 Comments: