அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு அக்கரைப்பற்று நகரில் திங்கட்கிழமை (நொவெம்பெர் 07, 2016) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் மோட்டர் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதிக் கொண்டதில் பாலமுனை ஹ{ஸைனியா நகரைச் சேர்ந்த எம். முஹம்மத் அன்வர் (வயது 25) என்பவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment