9 Nov 2016

விவசாயப் போதனாசிரியர்கள், மற்றும் கால்நடை அபிவிருத்திப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு…

SHARE
கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களுக்கு போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம்
வழங்கும் நிகழ்வு இன்று (09) திருகோணமலை கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் அலுவலக கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள், நியமனம் பெறுவோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாய மற்றும் கால்நடை அபிவிருத்தித் திணைக்களங்களினால் போட்டிப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 06 விவசாயப் போதனாசிரியர்களுக்கும், 03 கால்நடை அபிவிருத்திப் பரிசோதகர்களுக்கும் அமைச்சரினால் நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: