கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் களுவன்கேணி வந்தாறுமூலைப் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு விசேட செயற்திட்டம் ஒன்றின் கீழ் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு
வந்தாறுமூலை கால்நடை வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பதில் வைத்திய அதிகாரி புத்திக தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைரா சசிங்கம் அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மேலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் அமைச்சரின் அலுவலக உத்தியோகஸ்தர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் உதவிபெறுவோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட விசேட திட்டத்தின் கீழ் தெரிவு
செய்யப்பட்ட மேற்படி பிரதேசங்களின் கால்நடை வளர்ப்பாளர்கள் 16 பேருக்கு இலவச கோழிக் குஞ்சுகள் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment