24 Nov 2016

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு நவீன சொகுசு பஸ் வழங்கி வைப்பு

SHARE
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்திற்கு நவீன சொகுசு பஸ் வண்டி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.
முஹம்மத் நஸீரினால்  வியாழக்கிழமை (24.11.2016) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கும், சிறுவர் பாதுகாப்பு இல்லங்களிலும் இருப்போரை கவலையின்றி புத்துணர்ச்சியுடன் அவர்களின் சமய சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து அழைத்து செல்வதற்காகவும் கிழக்கு மாகாணத்தில் சமூகசேவைகள் செயற்பாடுகளையும் கவனத்திற் கொண்டு  இந்த நவீன சொகுசு  பஸ் வண்டி வழங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மத் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை வளாகத்தில் இடம்பெற்ற நவீன சொகுசு பஸ் வண்டி கையளிப்பு நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்கள அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், உதவிச் செயலாளர்களான ஜே. ஹ{ஸைன்தீன், எம். ஷியாஉல்ஹக்,  கணக்காளர் எஸ். திருக்குமார், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எம். வாஹீட் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: