26 Nov 2016

மூன்று மணி நேரங்களுக்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகினால் பாரிச வாத தாக்குதலை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் விஷேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ. திவாகரன்

SHARE
மூன்று மணி நேரங்களுக்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகினால் பாரிச வாத தாக்குதலை அவசர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விஷேட நரம்பியல் நிபுணர் வைத்தியர் ரீ. திவாகரன் தெரிவித்தார்.
தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சரித்திரத்தில் முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ள வுhசழஅடிழடலளளை வுசநயவஅநவெஎனப்படுகின்ற இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் பாரிச வாத தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்கும் விடயம் பற்றி வியாழக்கிழமை (24.11.2016) கருத்து வெளியிட்ட அவர், மேலும் கூறியதாவது, 

கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் பாரிச வாத நோயால் தாக்கப்பட்ட 80 வயது மூதாட்டி ஒருவர் தற்போது சில மணி நேரங்களுக்குள்ளாகவே பூரணமாக சுகப்படுத்தப்பட்டுள்ளார்.

இது ஒரு வெற்றிகரமான சாதனை. எனவே, இனிமேல் கிழக்கு மாகாணத்திலுள்ளவர்கள் பாரிச வாத நோயினால் தாக்கப்படும்போது அவர்கள் கூடியபட்சம் 3 மணிநேரங்களுக்குள்ளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவார்களாயின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவரது உடல் மற்றும் பாரிச வாத நிலை தகுதியானால் உடன் ஊசி மருந்து மூலம் பாரிசவாத தாக்கத்தை குணப்படுத்த முடியும்.

இச்சேவையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவின் ஒருங்கிணைப்பில் தற்பொழுது இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

கிழக்கு மாகாணத்தில் பாரிசவாத நோயினால் தாக்கப்படுவோர் உடனடியாக அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலையை அணுகினால் கிழக்கு மாகாணத்தின் எப்பாகத்திலிருந்தாலும் கூடியது 3 மணி நேரப் பயணத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அடைந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும்.
வுhசழஅடிழடலளளை வுசநயவஅநவெ எனப்படுகின்ற இரத்தக் கட்டியைக் கரைக்கும் சிகிச்சை முறைமூலம் சிகிச்சை அளிக்கும் முறை இலங்கையில் ஒரு சில அரசாங்க வைத்தியசாலைகளிலேயே காணப்படுகின்றது. அந்த சிகிச்சை முறை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடங்கப்பட்டுள்ளது முழுக் கிழக்கு மாகாண மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

எனவே பாரிச வாத நோயினால் தாக்கப்படுவோர் கூடியபட்சம் 3 மணித்தியாலங்களுக்குள்ளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுகி தங்களை குணப்படுத்திக் கொள்ள முடியும்.

SHARE

Author: verified_user

0 Comments: