மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதயான போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எல்லைப்புறக் கிராமமான நெல்லிக்காட்டு எனும் கிராமத்திலுள்ள ஸ்ரீ
நாக கன்னி ஆலயத்தின்கு புதன்கிழமை ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பனர் மார்க்கண்டு நடராசாவின் பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 50000 ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்களே இதன்போது வழங்கப்பட்டன.
புதன் கிழமை (02) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் வழங்கி வைத்த இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், மற்றும் பிரதேச செயலக கணக்காளர் வ.நாகேஸ்வரன் ஆகியோர் இணைந்து ஒலிபெருக்கி சாதனங்களை நெல்லிக்காட்டு ஸ்ரீ நாக கன்னி ஆலய தலைவர் வே.கந்தசாமி, செயலாளர் வி.ஜெயசீலன் ஆகியோரிடம் கையளித்தனர்.
மிக நீண்டகாலமாக ஒலிபெருக்கி சாதனம் இல்லாமல் இருந்த வந்த குறை தற்போது பூர்தி செய்யப்பட்டுள்ளதாக இதன்போது ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment