மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் புதன்கிழமை (02) முச்சக்கரவண்டி
பாலத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி உட்பட முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் மூவருமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்திய அதிகாரி கே. சுகுமார் தெரிவித்தார்.
பாதையில் திடீரெனக் குறுக்கிட்ட நபரை விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக முச்சக்கரவண்டியைத் திருப்பியபோது அது கட்டுப்பாட்டை இழந்து பாலத்துக்குள் வீழ்ந்ததாக முச்சக்கரவண்டியில் பயணித்தோர் தெரிவித்தனர்.
இதன்போதே முச்சக்கர வண்டிச் சாரதிக்கும் அதில் பயணித்தோருக்கும் காயம்ஏற்பட்டன.
0 Comments:
Post a Comment