தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீதி அபிவிருதிக்காக நிதி ஒதுக்கீடு செய்து தற்போது அபிவிருதி வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன இந்நிலையில் எமது பகுதியைச் சேர்ந்த
வேறு கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவர் அவர் இக்குறித்த வீதியைப் புணரமைப்புச் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிக்கை ஒன்றையும் விடுத்திருந்தார். அவர் அவ்வாறு பணம் ஒதுக்கீடு செய்திருந்தால் இவ்விதியின் புணரமைப்பை மேலும் விஸ்த்தரித்திருக்கலாம். தாங்களும் தற்போதைவரைக்கும் அரசியலில் இருக்கின்றோம் என்பதை மக்களுக்குத் தெரிவிப்பதற்காக அவ்வப்போது அகிக்கைகளுடாக சில அரசியல்வாதிகள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவற்றை நாம் அலட்டிக்கொண்டிருக்க வேண்டிய தேவை எமக்கில்லை.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் முயற்சியினால், 15603172.95 ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1.55 கிலோமீற்றர் வுpதி புணரமைப்புச் செய்யப்படவுள்ள போரதீவு – பழுகாமம் வீதியின் புணரமைப்பு வேலைகளை வெள்ளிக்கிமை (04) ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
ஏனைய கட்சி உறுப்பினர்களின் இப்பகுதி அபிவிருத்திகளுக்காக ஒதுக்கீடு செய்கின்ற நிதி வசதிகளும் வருவதற்கு நாம் தடையில்லை எப்படியோ அபிவிருத்திகள் நடைபெற்றால் நன்மையடையப்போவது எமது மக்கள்தான். அரசியலுக்காக அல்லாமல் ஏனையவர்களும் மக்களுக்காக அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் பட்ட கஸ்ற்ற நஸ்ற்றங்களை உணர்ந்து அபிவிருத்தியையோ, ஆட்சியைப் பற்றியோ சிந்திக்காமல், தமிழ் மக்களுக்காக பாடுபட்டு பேசக்கூடிய வல்லமையுடைய கட்சி என்பதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எமது மக்கள் ஆதரித்துள்ளார்கள். அபிவிருத்திகளையோ, பசப்பு வார்த்தைகளையோ கேட்டு ஏமாராமல் தொடர்ந்து தமிழ் தேசியத்தின்பால் எமது மக்கள் நிற்கின்றார்கள். ஆனலும் எமது மக்களின் அவிருத்தி செயற்பாடுபளையும் நாம் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றோம்.
இவ்வீதியை மேலும் பெரியபோரதீவு சந்தியிலிருந்து தும்பங்கேணி வரைக்கும் கார்பட் வீதியாக ஐ திட்டத்தினூடாக மேலும் செப்பனிடுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சி எடுத்துள்ளது என அர் தெரவித்தார்
0 Comments:
Post a Comment